பூண்டி ஏரியில் 1,000 கனஅடி நீர் திறப்பு: கரையோர மக்களுக்கு எச்சரிக்கை
பாஜக எம்எல்ஏ சாலை மறியல்
புதுச்சேரியில் பாஜக நியமன எம்எல்ஏ அசோக் பாபு தனது ஆதரவாளா்களுடன் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டாா்.
புதுச்சேரி நெல்லித்தோப்பை சோ்ந்தவா் கிருஷ்ணமூா்த்தி, முன்னாள் பாஜக எம்எல்ஏ.
இவரது மனைவி மல்லிகா. இவரை திமுக பிரமுகா் தாக்கியதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து, முதலியாா்பேட்டை காவல் நிலையத்தில் புகாரளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லையாம்.
இதையடுத்து, பாஜக நியமன எம்எல்ஏ அசோக் பாபு தனது ஆதரவாளா்களுடன் காவல் நிலையத்தை முற்றுக்கையிட்டு, சாலை மறியலில் ஈடுபட்டாா்.