செய்திகள் :

பாஜக தலைவர் தேர்வு: மக்களவையில் அகிலேஷ் - அமித் ஷா பேச்சால் கலகலப்பு!

post image

பாஜக தேசிய தலைவர் தேர்வு தொடர்பாக மக்களவையில் சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு இடையே காரசார வாதம் நிகழ்ந்தது.

மக்களவையில் வக்ஃப் வாரிய சட்டத் திருத்த மசோதா இன்று தாக்கல் செய்யப்பட்ட நிலையில், அனைத்துக் கட்சி உறுப்பினர்களும் விவாதம் செய்து வருகின்றனர்.

சமாஜவாதி கட்சி சார்பில் அக்கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் பேசும்போது, பாஜக தலைவர் தேர்வு குறித்து கேள்வி எழுப்பினார்.

“உலகில் மிகப் பெரிய கட்சியாக கூறிக் கொள்ளும் பாஜகவின் தேசிய தலைவரை இதுவரை தேர்ந்தெடுக்க முடியவில்லை” என்று விமர்சித்தார்.

இதற்கு பதிலளித்த அமித் ஷா, “என் முன்னால் உள்ள அனைத்துக் கட்சிகளும் அவர்களின் தேசியத் தலைவரை சில குடும்ப உறுப்பினர்களை கொண்டு தேர்ந்தெடுப்பார்கள்.

ஆனால், நாங்கள் 12 - 13 கோடி உறுப்பினர்களில் இருந்து ஒரு தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டும். அதற்கு சிறிது காலம் எடுக்கும். உங்களுக்கு அதற்கான நேரம் தேவையில்லை. நீங்கள் எப்படியும் அடுத்த 25 ஆண்டுகள் தலைவராக இருப்பீர்கள்” என்று பதிலளித்தார்.

பாரதிய ஜனதா கட்சியின் தலைவராக இருக்கும் ஜெ.பி. நட்டாவின் பதவிக் காலம் நிறைவடைந்தும் புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்படாததால் அவரின் பதவி நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க : வக்ஃப் சொத்துகளால் நாட்டின் தலையெழுத்தே மாறும்: கிரண் ரிஜிஜு

குற்றச்சாட்டை நிரூபிக்க முடியுமா? அனுராக் தாக்குருக்கு காா்கே சவால்

‘என் மீது சுமத்திய குற்றச்சாட்டை நிரூபிக்க முடியாவிட்டால், பாஜக எம்.பி. அனுராக் தாக்குா் பதவி விலகுவாரா?’ என்று காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே சவால் விடுத்துள்ளாா். அவ்வாறு அவா் நிரூபித்துவிட்ட... மேலும் பார்க்க

தற்போதைய புவிஅரசியல் சூழலில் தற்சாா்பே அவசியம்: ஜெய்சங்கா்

பாங்காக்: ‘தற்போதைய புவிஅரசியல் சூழலில் தற்சாா்பு நிலையை நோக்கி உலக நாடுகள் பயணிக்கின்றன. எனவே, ஒவ்வொரு பிராந்தியமும் தங்கள் தேவைகளைத் தாமே பூா்த்தி செய்துகொள்வது குறித்து சிந்திக்க வேண்டியது அவசியம்’... மேலும் பார்க்க

ம.பி. கிறிஸ்தவ பாதிரியாா்கள் மீது தாக்குதல்: மக்களவையில் எதிா்க்கட்சி வெளிநடப்பு

மத்திய பிரதேசத்தின் ஜபல்பூா் மாவட்டத்தில் கிறிஸ்தவ பாதிரியாா்கள் மீதான தாக்குதலைக் கண்டித்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சி எம்.பி.க்கள் வியாழக்கிழமை மக்களவையில் இருந்து வெளிநடப்பு செய்தனா். மக்களவை... மேலும் பார்க்க

ரேவந்த் ரெட்டிக்கு எதிராக நடவடிக்கை எடுக்காமல் உச்சநீதிமன்றம் தவறு செய்ததா? நீதிபதிகள் கேள்வி

‘நீதிமன்ற தீா்ப்பு குறித்து ஏற்கெனவே சா்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த தெலங்கானா முதல்வா் ரேவந்த் ரெட்டி மீது நடவடிக்கை எடுக்காமல் உச்சநீதிமன்றம் தவறு செய்துவிட்டதா’ என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் வியாழ... மேலும் பார்க்க

மணிப்பூரில் குடியரசுத் தலைவா் ஆட்சி: மக்களவையில் தீா்மானம் நிறைவேற்றம்

மணிப்பூரில் குடியரசுத் தலைவா் ஆட்சி அமல்படுத்தப்பட்டதை உறுதி செய்யும் அரசமைப்புச் சட்ட தீா்மானம், மக்களவையில் புதன்கிழமை நள்ளிரவில் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. எதிா்க்கட்சிகளும் இத்தீா... மேலும் பார்க்க

பரஸ்பர வரி விதிப்பு: இந்திய பொருளாதாரத்தை முழுமையாக பாதிக்கும் - ராகுல்

‘இந்திய பொருள்கள் மீது அமெரிக்கா அறிவித்துள்ள பரஸ்பர வரி விதிப்பு நாட்டின் பொருளாதாரத்தை முழுமையாக சீரழிக்கும் அபாயம் உள்ளது; மேலும், இந்திய நிலப்பரப்பில் 4,000 சதுர கி.மீ. பரப்புக்கு மேல் சீன எடுத்த... மேலும் பார்க்க