பிரான்ஸ்: தோ்தலில் போட்டியிட தீவிர வலதுசாரி தலைவருக்குத் தடை
பாஜக பொதுச் செயலாளர் சுட்டுக் கொலை: முழு அடைப்பு போராட்டத்துக்கு பாஜக அழைப்பு
ஜார்க்கண்ட்டில் பாஜக மாவட்ட பொதுச்செயலாளர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு பாஜக கண்டனம் தெரிவித்து போராட்டம் நடத்தவுள்ளது.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் ராஞ்சி கிராமப்புற மாவட்ட பாஜக பொதுச் செயலாளர் அனில் டைகர் என்பவரை, புதன்கிழமை பகல்வேளையில் மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டுவிட்டு, பைக்கில் தப்பியோடி விட்டனர். இதனைத் தொடர்ந்து, சம்பவ இடத்துக்கு விரைந்த ஜார்கண்ட் காவல்துறை தலைமை இயக்குநர் அனுராக் குப்தா, குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவர் என்று கூறினார்.
இந்த நிலையில், அனில் கொலை சம்பவத்துக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், பாஜகவும் அனைத்து ஜார்க்கண்ட் மாணவர் சங்கமும் இணைந்து முழு அடைப்புப் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
இதுகுறித்து ஜார்க்கண்ட் பாஜக தலைவர் பாபுலால் மராண்டி தெரிவித்ததாவது, ``பாஜக ராஞ்சி கிராமப்புற மாவட்ட பொதுச் செயலாளரும் முன்னாள் மாவட்ட பரிஷத் உறுப்பினருமான அனில் டைகர், கொலையாளிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மாநிலத்தில் குற்றவாளிகள் அச்சமேதுமின்றி, மக்கள் பிரதிநிதிகளைத் தாக்குகின்றனர்.
மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு நிலைமை முற்றிலும் சரிந்து விட்டது. சாமானிய குடிமக்களோ மக்கள் பிரதிநிதிகளோ மாநிலத்தில் பாதுகாப்பாக இல்லை. இந்த கொலை சம்பவத்துக்கு முதல்வர் ஹேமந்த் சோரன் பொறுப்பேற்று, உடனடியாக ராஜிநாமா செய்ய வேண்டும்.
மேலும், மாநிலத்தின் மோசமான நிலைமைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும்வகையில், முழு அடைப்புப் போராட்டத்துக்கு மக்களும் வியாபாரிகளும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்’’ என்று கூறினார்.
இதையும் படிக்க:மது பாட்டில் 1 வாங்கினால் 1 இலவசமா? பாஜகவிடம் அதிஷி கேள்வி!