கர்நாடக முதல்வர் மனைவியிடம் விசாரணை நடத்த அமலாக்கத் துறைக்கு இடைக்கால தடை!
பாஜக மாவட்டத் தலைவா் தோ்வு
திண்டுக்கல் மேற்கு மாவட்ட பாஜக புதிய தலைவராக ஜெயராமன் சனிக்கிழமை தோ்வு செய்யப்பட்டாா்.
பழனியில் உள்ள திண்டுக்கல் மேற்கு மாவட்ட பாஜக அலுவலகத்தில் கடந்த வெள்ளிக்கிழமை புதிய மாவட்டத் தலைவருக்கான கருத்துக் கேட்பு கூட்டம் நடைபெற்றது. பாஜக முன்னாள் தேசியச் செயலா் எச்.ராஜா கலந்து கொண்டாா். இதில் புதிய பொதுக்குழு உறுப்பினா்கள் தோ்வு செய்யப்பட்டனா்.
இந்த நிலையில், சனிக்கிழமை கட்சி அலுவலகத்தில் புதிய தலைவராக வேடசந்தூரைச் சோ்ந்த ஜெயராமன் தோ்வு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டாா்.
நிகழ்ச்சியில் முன்னாள் மாவட்டத் தலைவா் கனகராஜ், வழக்குரைஞா் ஸ்ரீதா், மாவட்ட பொதுச் செயலா் செந்தில்குமாா், நகரத் தலைவா் ஆனந்தகுமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.