செய்திகள் :

``பாஜக-வுக்குத்தான் மோடி தேவை, மோடிக்கு பாஜக தேவை அல்ல; 2029-ல் மோடியை..'' - பாஜக எம்.பி பளீச்

post image

ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத், "75 வயதைக் கடக்கும் தலைவர்கள் மற்றவர்களுக்கு வழிவிட்டு ஓய்வுபெற வேண்டும்" என்று சமீபத்தில் கூறியது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக இருக்கிறது.

குறிப்பாக, பிரதமர் மோடிக்கு வரும் செப்டம்பர் 17-ம் தேதியோடு 75 வயது நிறைவடைவதால், புதிய பிரதமரை பா.ஜ.க தேர்வுசெய்யுமா என்று எதிர்க்கட்சிகள் தரப்பிலிருந்து கேள்விகள் எழுப்பப்பட்டன.

பிரதமர் மோடி, மோகன் பகவத்
பிரதமர் மோடி, மோகன் பகவத்

இந்த விவகாரத்தைக் கடந்த மக்களவைத் தேர்தலின்போதே கையிலெடுத்த எதிர்க்கட்சிகள், பா.ஜ.க தேர்தலில் வென்றாலும் ஒன்றரை வருடத்துக்குப் பிறகு புதிய பிரதமரை அவர்கள் தேர்வுசெய்வார்கள் என்று பிரசாரம் செய்தன.

ஆனால், அப்போதே அமித் ஷா உள்ளிட்ட பா.ஜ.க தலைவர்கள், 2029 வரை மோடிதான் பிரதமராக இருப்பார் என்று கூறிவந்தனர்.

இந்த நிலையில், 2029 தேர்தலில் பா.ஜ.க-வின் முகமாக மோடியை முன்னிறுத்தாவிட்டால் 150 இடங்களைக் கூட வெல்ல முடியாது என்று பா.ஜ.க எம்.பி நிஷிகாந்த் துபே வெளிப்படையாகக் கூறியிருக்கிறார்.

Nishikant Dubey | நிஷிகாந்த் துபே
Nishikant Dubey | நிஷிகாந்த் துபே

தனியார் ஊடகத்துடனான நேர்காணலில் பேசிய நிஷிகாந்த் துபே, "அடுத்த 15 - 20 வருடங்களுக்கு மோடியை மட்டுமே பா.ஜ.க-வின் மையமாக நான் பார்க்கிறேன்.

2029 மக்களவைத் தேர்தலில் மோடியைத் தங்களின் முகமாக முன்னிறுத்தாவிட்டால் 150 இடங்களைக் கூட பா.ஜ.க-வால் வெல்ல முடியாது.

2029 தேர்தலில் மோடியை முன்னிறுத்தி போட்டியிடுவதைத் தவிர பா.ஜ.க-வுக்கு வேறு வழியில்லை.

மோடிக்கு பா.ஜ.க தேவை என்பதை விட, ஆட்சியில் இருப்பதற்கு பா.ஜ.க-வுக்கு மோடி தேவை என்பதால், இந்த வரம்பு (75 வயது) அவருக்குப் பொருந்தாது." என்று கூறினார்.

மும்பை: சட்டமன்ற வளாகத்தில் அடிதடி.. பாஜக, சரத்பவார் கட்சி எம்எல்ஏ-க்கள் மோதலுக்கு காரணம் என்ன?

மகாராஷ்டிரா சட்டமன்ற வளாகத்தில் ஆளும் கட்சி எம்எல்ஏ ஆதரவாளர்களும், எதிர்க்கட்சிக்கட்சி எம்எல்ஏ ஆதரவாளர்களும் மோதிக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மும்பையில் உள்ள சட்டமன்ற வளாகத்தின் வாசல... மேலும் பார்க்க

'பாஜக-வோடு நிற்கும் யாரோடும் கூட்டணி இல்லை!' - எடப்பாடிக்கு தவெக பதில்

எடப்பாடி பழனிசாமி ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு பேட்டி அளித்திருந்தார். அதில், 'தவெகவுடன் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்துகிறீர்களா?' எனும் கேள்விக்கு, 'தேர்தல் யுக்திகளை வெளியில் சொல்ல முடியாது.' எனப் பதில... மேலும் பார்க்க

``காமராஜரை எருமைத் தோலன் என திமுக விமர்சித்தது!" - அண்ணாமலை காட்டம்

பாஜக-வின் முன்னாள் மாநிலத் தலைவரான அண்ணாமலை திருப்பூரில் பத்திரிகையாளரை சந்தித்திருந்தார். அப்போது, திமுக பற்றியும் காமராஜர் பற்றியும் சில முக்கியமான விஷயங்களை அவர் பேசியிருந்தார்.அண்ணாமலைஅண்ணாமலை பேச... மேலும் பார்க்க

"ரஷ்யாவுடன் வர்த்தகம்... இரட்டை நிலைப்பாடுகள்" - NATO-வின் மிரட்டலுக்கு இந்தியா பதில்!

இந்தியாவின் எரிசக்தி தேவையைப் பூர்த்தி செய்வதில் ரஷ்யாவிடமிருந்து இறக்குமதி செய்யப்படும் எண்ணெய் கணிசமான பங்கு வகிக்கிறது. ரஷ்யாவுடன் தொடர்ந்து வர்த்தகம் செய்தால் இந்தியா, பிரேசில், சீனா ஆகிய நாடுகளின... மேலும் பார்க்க

``சுந்தரா டிராவல்ஸ் அல்ல; உங்கள் ஆட்சிக்கு முடிவு கட்டும் டிராவல்ஸ்..'' - ஆர்.பி.உதயகுமார்

"முதலமைச்சர் விமர்சனம் செய்யலாம், ஆனால், வயிற்றெரிச்சலால் வசைபாடக்கூடாது, அதை மக்கள் வரவேற்க மாட்டார்கள்.." என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.ஆர்.பி.உதயகுமார்இதுகுறித்து அவர் வ... மேலும் பார்க்க

RIC: ரஷ்யா - இந்தியா - சீனா கூட்டமைப்பு மீண்டும் உருவாக்கப்படுகிறதா... வெளியுறவுத்துறை சொல்வதென்ன?

இந்தியா சீனா மற்றும் ரஷ்யா ஆகிய மூன்று நாடுகளும் இணைந்து செயல்படும் RIC இயக்கமுறையை (Russia-India-China Mechanism) மீண்டும் நிறுவுவது பற்றிய பேச்சுகள் எழுந்துள்ளன. இதுகுறித்து வியாழக்கிழமை செய்தியாளர்... மேலும் பார்க்க