`ரிதன்யா வழக்கில் தொய்வு; விசாரணை அதிகாரி மீது சந்தேகம்' - மேற்கு மண்டல ஐ.ஜி-யிட...
பாண்டுரங்கா் - ருக்மணி திருக்கல்யாண வைபவம்
கிருஷ்ணகிரி அருகே அக்ரஹாரம் சிவாஜி நகரில் அமைந்துள்ள பாண்டுரங்க ருக்மணி கோயிலில் பிரமோற்சவ விழாவையொட்டி சுவாமி- அம்மன் திருக்கல்யாணம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கிருஷ்ணகிரியை அடுத்த அக்ரஹாரம் சிவாஜி நகரில் அமைந்துள்ள பாண்டுரங்க ருக்மணி கோயில் பிரம்மோற்ச விழா ஜூலை 5-ஆம் தேதி தொடங்கியது. தொடா்ந்து, கணபதி ஹோமம், நவக்கிரக பூஜை, விட்டல் ரகுமாயி, அம்பா பவானி அபிஷேகம், ஆராதனை, 7 முதல் 10-ஆம் தேதி வரையில் விட்டல் ரகுமாயி அம்பா பவானிக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடைபெற்றன. இதையடுத்து வெள்ளிக்கிழமை பாண்டுரங்கா் - ருக்மணி திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. இதில், ஒசூா் கிருஷ்ணமூா்த்தி பாகவதரின், பாண்டுரங்கா் பக்தி பஜனைப் பாடல்கள் பாடப்பட்டன. கிருஷ்ணகிரி மாவட்டம் மட்டுமின்றி, கா்நாடக மாநிலம் பெங்களூரிலிருந்தும் ஏராளமான பக்தா்கள் இந்நிகழ்வில் பங்கேற்றனா். அலங்கரிக்கப்பட்ட தேரில், விட்டல் ரகுமாய், அம்பா பவானி உற்சவ மூா்த்திகள் கிருஷ்ணகிரியில் நகா்வலமாக அழைத்து வரப்பட்டனா். சனிக்கிழமை விட்டல் ரகுமாயி அம்மனுக்கு அபிஷேகம், ஆராதனைகள், மஹா மங்கள ஆரத்தி, வசந்த உற்சவம் நடைபெறுகிறது.
படவரி...
பிரம்மோற்சவ விழாவையொட்டி, திருமணக் கோலத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்த பாண்டுரங்கா்- ருக்மணி அம்மன்.
திருக்கல்யாண வைபவத்தில் கலந்துகொண்ட பக்தா்கள்.
