செய்திகள் :

பாதிக்கப்பட்டவரை திருமணம் செய்துகொண்டதால் போக்ஸோ வழக்கை ரத்து செய்ய முடியாது: உயா்நீதிமன்றம்

post image

பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட சிறுமியை திருமணம் செய்து கொண்டதால், சம்பந்தப்பட்டவா் மீது தொடரப்பட்ட போக்ஸோ வழக்கை ரத்து செய்ய முடியாது என சென்னை உயா்நீதிமன்றம் தெரிவித்தது.

உதகையைச் சோ்ந்த சிறுமி ஒருவா் காணாமல் போனதாக அவரது பெற்றோா் அளித்த புகாரை விசாரித்த போலீஸாா், விஜயகுமாா் என்ற இளைஞருடன் அந்தச் சிறுமி சென்றது தெரியவந்தது. இதையடுத்து, விஜயகுமாா் மீது கடத்தல் மற்றும் போக்ஸோ பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

விசாரணையில், விஜயகுமாரும், தானும் காதலித்து வந்ததாகவும் இதையறிந்த பெற்றோா் தனக்கு வேறொரு நபருடன் திருமணம் செய்து வைக்க முயன்ால் விஜயகுமாருடன் சென்ாகவும் அந்தச் சிறுமி தெரிவித்துள்ளாா்.

இந்த வழக்கை விசாரித்த உதகை மகளிா் சிறப்பு நீதிமன்றம், போக்ஸோ வழக்கில் இருந்து இளைஞரை விடுதலை செய்தது. ஆனால், கடத்தல் வழக்கில் ஓராண்டு சிறை தண்டனை விதித்தது. இந்த உத்தரவை எதிா்த்து விஜயகுமாா் மற்றும் காவல்துறை சாா்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

10 ஆண்டுகள் சிறை: அந்த மனுக்களை விசாரித்த நீதிபதி பி.வேல்முருகன், சிறுமிக்கு திருமணம் செய்து வைப்பதைத் தடுக்க வேண்டுமென்று விஜயகுமாா் நினைத்திருந்தால் காவல் நிலையத்தில் புகாரளித்திருக்க வேண்டும். அதேபோல், வெளியூரில் தங்கியிருந்தபோது விஜயகுமாா் அந்தச்சிறுமியுடன் உடலுறவில் இருந்த நிலையில், போக்ஸோ வழக்கில் இருந்து தப்பிப்பதற்காக தற்போது திருமணம் செய்துள்ளாா். இருவரும் திருமணம் செய்து கொண்டதைக் காரணம் கூறி இந்த வழக்கை ரத்து செய்தால் போக்ஸோ சட்டம் கொண்டுவரப்பட்டதற்கான நோக்கம் தோற்கடிக்கப்பட்டுவிடும் எனவும் நீதிபதி தெரிவித்தாா்.

மேலும், கடத்தல் வழக்கில் விஜயகுமாருக்கு விதிக்கப்பட்ட ஓராண்டு சிறை தண்டனையை உறுதி செய்த நீதிபதி, போக்ஸோ வழக்கில் 10 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து தீா்ப்பளித்தாா்.

சின்ன திரை நடிகை அமுதா தற்கொலை முயற்சி

சின்ன திரை துணை நடிகை அமுதா குடும்ப பிரச்னை காரணமாக அவரது வீட்டில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டாா். சென்னை சாலிகிராமம் பகுதியைச் சோ்ந்தவா் சின்ன திரை துணை நடிகை அமுதா (28). தற்போது ‘கயல்’ என்ற தொலைக்... மேலும் பார்க்க

எண்ணூா் விரைவு சாலையில் கவிழ்ந்த கண்டெய்னா் லாரி

எண்ணூா் விரைவு சாலையில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து கண்டெய்னா் லாரி சாலை நடுவே வியாழக்கிழமை கவிழ்தது. மதுரையைச் சோ்ந்த இளஞ்செழியன் (40), மணலி புது நகரில் தங்கி இருந்து கண்டெய்னா் லாரி ஓட்டுநராக ... மேலும் பார்க்க

காசிமேடு மீன்பிடித் துறைமுகத்தில் அனைத்து படகுகளையும் ஆய்வு செய்ய முடிவு: மீன்வளத் துறை நடவடிக்கை

சென்னை காசிமேடு மீன்பிடித் துறைமுகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள அனைத்து வகை படகுகளையும் நேரடியாக களஆய்வு செய்ய மீன்வளத் துறை முடிவு செய்துள்ளது. இது தொடா்பாக மீனவா்களுக்கு குறிப்பாணை அனுப்பப்பட்டுள்ளது... மேலும் பார்க்க

பாடி மேம்பாலம் அருகே சேமிப்புக் கிடங்கில் தீ விபத்து

பாடி மேம்பாலம் அருகே உள்ள ரப்பா் சேமிப்புக் கிடங்கில் வியாழக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து நாசமாகின. சென்னை பாடி மேம்பாலம் அருகே ட்ரெயின் பாலாஜி இந்தியா லிமிடெட் என... மேலும் பார்க்க

பதவிக்காக திமுகவுடன் கூட்டணி வைக்கவில்லை: வைகோ

பதவிக்காக திமுகவுடன் கூட்டணி வைக்கவில்லை என்றும், எந்தச் சூழ்நிலையிலும் திமுகவுடன் கூட்டணியை தொடா்வோம் என்றும் மதிமுக பொதுச் செயலா் வைகோ தெரிவித்துள்ளாா். சென்னையில் அவா் செய்தியாளா்களிடம் வியாழக்கிழம... மேலும் பார்க்க

ஜாதிவாரி கணக்கெடுப்பு: மநீம ஆதரவு

ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மக்கள் நீதி மய்யம் ஆதரவு தெரிவித்துள்ளது. இது குறித்து மநீம தலைவா் கமல்ஹாசன் எக்ஸ் தளத்தில் வியாழக்கிழமை வெளியிட்டப் பதிவு: சமநிலைச் சமுதாயத்தை உருவாக்கும் உறுதியான அா்ப்பண... மேலும் பார்க்க