செய்திகள் :

பாதியில் நிறுத்தப்படும் தொகுப்பு வீடுகள்: பணி மேற்பார்வையாளரின் மெத்தனப் போக்கே காரணமா?

post image

பென்னாகரம்: பென்னாகரம் பகுதிகளில் அரசின் சார்பில் சீரமைக்கப்பட்டு வரும் தொகுப்பு வீடுகளுக்கான சீரமைப்பு கட்டணத்தினை ஒன்றிய பணி மேற்பார்வையாளர் முறையாக ஆய்வு மேற்கொண்டு அறிக்கை வழங்காததால் சுமார் 50-க்கும் மேற்பட்ட வீடுகள் கட்டடப்பணிகள் மேற்கொள்ள முடியாமல் பாதியில் நிறுத்தப்படும் அவல நிலை ஏற்பட்டுள்ளதாகவும், இதற்கு ஒன்றிய பணி மேற்பார்வையாளரின் மெத்தனப் போக்கே காரணம் என பயனாளிகள் புகார் தெரிவிக்கின்றனர்.

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே பருவதன அள்ளி ஊராட்சிக்கு உள்பட்ட அண்ணா நகர் காலனி பகுதியில் சுமார் 40-க்கும் மேற்பட்ட அரசின் தொகுப்பு வீடுகள் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டு பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது. இதில் பெரும்பாலான வீடுகளின் மேற்கூரை சிமென்ட் தளம் பெயர்ந்து விழுந்து சீதளமடைந்து காணப்படுகிறது.

இதையடுத்து பழுதடைந்த கான்கிரீட் வீட்டினை சரி செய்ய பென்னாகரம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தின் மூலம், பருவதன அள்ளி ஊராட்சி நிர்வாகத்திடம் ஆணை வழங்கப்பட்டு அதற்கான பணிகளை அண்ணா நகர் பகுதியில் வசிக்கும் பயனாளிகள் மேற்கொண்டு வந்தனர்.

இந்த நிலையில், சீரமைப்புப் பணிகளை ஆய்வு மேற்கொள்ளும் ஒன்றிய பணி மேற்பார்வையாளர் தமிழ்செல்வி, முறையாக பணிகளை ஆய்வு மேற்கொள்ளாமல், கட்டடப் பணிகளை மேற்கொண்டு வரும் பயனாளிகள் இதுநாள் வரை பணியை தொடங்கவில்லை என அறிக்கை அளிக்கப்பட்டதால் சுமார் 20-க்கும் மேற்பட்ட வீடுகள் பணி முடிவுற்றும் அதற்கான சீரமைப்புத் தொகை கிடைக்காமல் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

இதுகுறித்து ஒன்றிய பணி தல மேற்பார்வையாளரிடம் புகார் தெரிவித்தால், முறையாக பதிலளிக்காமல் அலட்சியப் போக்குடன் செயல்படுவதாகவும் புகார் தெரிவிக்கின்றனர். மேலும் வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு சென்று புகார் அளிக்கும்போது அவர்கள் நாள்களைக் கடத்தும் செயல்களில் ஈடுபடுகின்றனர்.

கட்டுமானப் பொருள்களின் விலை தொடா்ந்து உயா்ந்து வருவதால் கட்டடப் பணிகளை தொடர முடியாத நிலை ஏற்படுகிறது.

எனவே அண்ணா நகர் பகுதியில் அரசின் தொகுப்பு வீடுகள் சீரமைக்கும் பயனாளிகளை முறையாக கணக்கீடு செய்து, முடிவுற்ற பணிகளுக்கான சீரமைப்புத் தொகையினை வங்கிக் கணக்கில் செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிக்க |மாணவி பாலியல் வழக்கில் கைதானவர் திமுகவைச் சேர்ந்தவர் அல்ல: அமைச்சர் விளக்கம்!

சிமென்ட் தளம் பெயர்ந்து விழுந்து சீதளமடைந்து காணப்படும் வீடுகளின் மேற்கூரை

இது குறித்து பயனாளி மாதம்மாள் கூறிதாவது:

பருவதன அள்ளி ஊராட்சிக்கு உள்பட்ட அண்ணா நகர் பகுதியில் கடந்த 2000 ஆம் ஆண்டு அரசின் சார்பில் தொகுப்பு வீடுகள் வழங்கப்பட்டது. அதனை சீரமைப்பதற்கான ஆணை அண்மையில் பருவதனஅள்ளி ஊராட்சி நிர்வாகத்தின் மூலம் பெறப்பட்டு அதற்கான பணிகளை நடந்து வருகிறது.

அண்ணா நகர் பகுதியில் பெரும்பாலான பயனாளிகள் கட்டப்பணிகளை முடித்தும், அதற்கான சீரமைப்புத் தொகை வங்கி கணக்கில் செலுத்தப்படாததால் அடுத்த கட்ட பணிகளை மேற்கொள்ள முடியாமல் வீடுகளின் கட்டட பணிகள் பாதியில் நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பயனாளிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாவதாகவும், இது குறித்து அதிகாரிகளிடம் தெரிவிக்கும்போது ஒன்றிய பணி மேற்பார்வையாளர் ஆய்வறிக்கை வழங்கவில்லை என தெரிவிக்கின்றனர்.

இதனால் வங்கி கணக்கில் சீரமைப்புப் தொகை செலுத்தாமல் பணிகள் பாதியில் நிறுத்தப்படுகிறது.மேலும் முடிவுற்ற பணிகளுக்கு கூட கணக்கில் முதல் தவணை தொகை கூட செலுத்தாமல் உள்ளனர். இதற்கு ஒன்றிய பணி மேற்பார்வையாளரின் மெத்தனப் போக்கே காரணம் என பயனாளிகள் புகார் தெரிவிக்கின்றனர்.

எனவே மாவட்ட ஆட்சியா் உடனடியாக நடவடிக்கை எடுத்து பேரூராட்சியில் அரசின் தொகுப்பு வீடுகள் கட்டி வரும் பயனாளிகளின் வங்கிக் கணக்கில் தவணை முறையில் முறையாக பணத்தைச் செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

டிச. 30-ல் அதிமுக ஆர்ப்பாட்டம்: இபிஎஸ்

அதிமுக சார்பில் இன்று நடைபெறவிருந்த ஆர்ப்பாட்டம் வரும் டிச. 30 ஆம் தேதியன்று நடைபெறும் என்று அதிமுக பொதுச் செயலரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்துள்ளார்.அண்ணாமலை பல்கலை. வளா... மேலும் பார்க்க

மொராக்கோ கடல்பகுதியில் மூழ்கிய அகதிகள் படகு! 69 பேர் பலி!

மொராக்கோ கடல்பகுதியில் தற்காலிகப் படகு மூழ்கியதில் 69 அகதிகள் பலியாகினர்.கடந்த டிச.19 அன்று ஐரோப்பிய கண்டத்திலுள்ள ஸ்பெயின் நாட்டிற்கு பயணித்த 80 பேர் கொண்ட தற்காலிகப் படகு வட ஆப்பிரிக்க நாடான மொராக்க... மேலும் பார்க்க

2 கிராமங்களின் மீது துப்பாக்கி மற்றும் வெடிகுண்டு தாக்குதல்!

மணிப்பூர் மாநிலத்தில் 2 கிராமங்களின் மீது ஆயுதப்படையினர் துப்பாக்கியால் சுட்டும், வெடிகுண்டுகளை வீசியும் தாக்குதல் நடத்தினர்.அம்மாநிலத்தின் கிழக்கு இம்பால் மாவட்டத்தின் இரண்டு கிராமங்களின் மீது இன்று ... மேலும் பார்க்க

சென்னை புத்தகக் காட்சி: துணை முதல்வர் உதயநிதி தொடக்கிவைத்தார்!

48-வது சென்னை புத்தகக் காட்சியை துணை முதல்வர் உதயநிதி தொடக்கிவைத்தார்.துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின், பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோா் புத்தகக் காட்சியைத் தொடங்கி வைத்தனர... மேலும் பார்க்க

விஜயகாந்த் நினைவு நாள்: விஜய்க்கு அழைப்பு!

மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் முதலாமாண்டு நினைவு நாள் கூட்டத்தில் பங்கேற்கதமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்க்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.தேமுதிக துணைப் பொதுச் செயலாளர் எல்.கே.சுதீஷ், விஜயக... மேலும் பார்க்க

மன்மோகன் சிங் அரசியலுக்கு வந்தது எப்படி?

முன்னாள் பிரதமா் மன்மோகன் சிங் (92) உடல்நலக் குறைவு காரணமாக தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் வியாழக்கிழமை இரவு 8.06 மணிக்கு அனுமதிக்கப்பட்டவர் நினைவு இழந்ததையடுத்து, 9.51 மணிக்... மேலும் பார்க்க