செய்திகள் :

`பாதி நீயே என் பாதி நீயே!' - காதலை அறிவித்த விஜே சங்கீதா - அரவிந்த் சேஜூ!

post image

`கனா காணும் காலங்கள்' வெப் சீரிஸில் மலர் கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகை சங்கீதா. சில தனிப்பட்ட காரணங்களால் அவர் அந்த சீரிஸில் இருந்து விலகினார். இரண்டாவது சீசனில் இருந்து வேறொருவர் மலர் கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். விஜே சங்கீதாவாக நமக்கு பரிச்சயமானவர் தற்போது நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

சங்கீதா - அரவிந்த் சேஜூ

விஜய் டிவியில் ஒளிபரப்பான `தமிழும் சரஸ்வதியும்' தொடரிலும் சங்கீதா நடித்திருந்தார். `கனா காணும் காலங்கள்' வெப் சீரிஸில் கலை கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் அரவிந்த் சேஜூ. இவர் சினிமாவிலும் நடித்திருக்கிறார். யூடியூப்பிலும் பரிச்சயமான முகம்.

`கனா காணும் காலங்கள்' வெப் சீரிஸில் நடித்திருந்த இவர்கள் இருவரும் தற்போது கணவன் - மனைவி ஆக இருக்கிறார்கள். சங்கீதா அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில்,

சங்கீதா - அரவிந்த்

"வாழ்க்கையைத் தொடங்க நாட்களை எண்ணிக் கொண்டிருக்கிறேன்!" என்கிற கேப்ஷனுடன் தங்களுடைய காதலை அறிவித்திருக்கிறார்.

`கனா காணும் காலங்கள்' சீரிஸில் நடித்திருந்த ராஜா வெற்றி பிரபு - தீபிகா திருமணம் நடைபெற்றிருந்தது. தற்போது அந்த சீரிஸில் நடித்திருந்த இவர்கள் தங்களுடைய திருமணத்தை அறிவித்திருக்கிறார்கள்.

சங்கீதா - அரவிந்த்

இவர்களுக்குப் பலரும் வாழ்த்துகள் கூறி வருகின்றனர்.

வாழ்த்துகள் சங்கீதா - அரவிந்த்! 

BB Tamil 8 Day 90: ‘முத்து… நீங்க பண்ற வேலையா இது?’ - விசே காட்டம்; மற்றொரு எவிக்சன்

இந்த எபிசோடில் வெளியேற்றப்பட்ட ராணவ்வை, சவுந்தர்யாவின் ‘ஃபீமேல் வெர்ஷன்’ எனலாம். ‘கேமிற்காக செய்கிறேன்’ என்று பாவனை செய்தாலும் மேடைக்கு வந்த போது வீட்டிற்குள் இருந்த ராணவ்வைத்தான் பார்க்க முடிந்தது. ர... மேலும் பார்க்க

Bigg Boss Tamil 8: வெளியேறிய வைல்டு கார்டு என்ட்ரி போட்டியாளர்கள்! - மீண்டும் டபுள் எவிக்‌ஷன்?

பிக்பாஸ் தமிழ் 8 கிளைமேக்ஸை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறது. பதினெட்டு போட்டியாளர்களுடன் தொடங்கிய நிகழ்ச்சியில் பிறகு வைல்டு கார்டு எண்ட்ரி மூலம் ஆறு பேர் சேர்ந்தனர்.அடுத்தடுத்த எவிக்‌ஷன் மூலம் ரஞ்சித... மேலும் பார்க்க

BB Tamil 8: 'ரயானுக்கு டிக்கெட் கிடைச்சிருக்கக்கூடாது' - விஜய் சேதுபதியிடம் சொன்ன முத்துக்குமரன்

பிக் பாஸ் நிகழ்ச்சியின் 90-வது நாளுக்கான புரோமோ வெளியாகி இருகிறது.பிக் பாஸ் வீட்டில் இந்த வாரம் டிக்கெட் டு ஃபினாலேவுக்கான டாஸ்க்குகள் நடந்தது. இதனால் கடுமையான போட்டிகளும், வாக்குவாதங்களும் போட்டியாளர... மேலும் பார்க்க

BB Tamil 8: மீண்டும் டபுள் எவிக்‌ஷன்; வெளியேறப்போகும் இருவர்!

கடைசிக்கட்ட பரபரப்புடன் போய்க் கொண்டிருக்கிறது பிக்பாஸ் சீசன் 8. பதினெட்டு போட்டியாளர்களுடன் தொடங்கிய நிகழ்ச்சியில் சில வாரங்களுக்குப் பின் வைல்டு கார்டு என்ட்ரி மூலம் மேலும் ஆறு பேர் சேர மொத்தப் போட்... மேலும் பார்க்க

BB Tamil 8: `இனி எப்படி விளையாடணும்னு சொல்ல போறது இல்ல,ஆனா...'- சாட்டை சுழற்றும் விஜய் சேதுபதி

பிக் பாஸ் நிகழ்ச்சியின் 90-வது நாளுக்கான புரோமோ வெளியாகி இருகிறது.பிக் பாஸ் வீட்டில் இந்த வாரம் டிக்கெட் டு ஃபினாலேவுக்கான டாஸ்க்குகள் நடந்தது. இதனால் கடுமையான போட்டிகளும், வாக்குவாதங்களும் போட்டியாளர... மேலும் பார்க்க