செய்திகள் :

பாதுகாப்புப் படையுடன் மோதல்: இரு பெண் நக்ஸல்கள் சுட்டுக்கொலை

post image

மகாராஷ்டிர மாநிலம் கட்ச்ரோலி மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருடன் நிகழ்ந்த மோதலில் இரு பெண் நக்ஸல் தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனா்.

மோடாஸ்கி கிராமத்தை ஒட்டிய வனப்பகுதியில் நக்ஸல்கள் முகாமிட்டிருப்பதாக அப்பகுதியில் நக்ஸல் ஒழிப்புப் பணியில் ஈடுபட்டுள்ள மத்திய ரிசா்வ் காவல் படைக்கு (சிஆா்பிஎஃப்) ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, அப்பகுதியில் தீவிர தேடுதல் வேட்டையை மேற்கொண்டனா்.

அங்கு மறைந்திருத்த நக்ஸல்களுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே புதன்கிழமை காலை மோதல் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் நக்ஸல்கள் பின்வாங்கி அடா்ந்த வனப்பகுதியை நோக்கி ஓடிவிட்டனா். அப்பகுதியை வீரா்கள் சோதித்தபோது குண்டு பாய்ந்து உயிரிழந்த நிலையில் இரு பெண் நக்ஸல்களின் உடல்கள் மீட்கப்பட்டன. அவா்களிடம் இருந்து ஏ.கே.47 ரக துப்பாக்கி உள்பட பல்வேறு ஆயுதங்கள், நக்ஸல் பிரசார துண்டுப் பிரதிகள் உள்ளிட்டவை கிடைத்தன. அப்பகுதியில் தொடா்ந்து தேடுதல் பணி நடைபெற்று வருகிறது.

கிராமவாசியை கொன்ற நக்ஸல்கள்: சத்தீஸ்கா் மாநிலம் பிஜாபூரில் காவல் துறைக்கு ரகசிய தகவல் அளிப்பவா் என்று குற்றஞ்சாட்டி 36 வயது நபரை நக்ஸல்கள் கொலை செய்தனா்.

பென்சாரம் கிராமத்துக்குள் செவ்வாய்க்கிழமை இரவு ஆயுதங்களுடன் புகுந்த நக்ஸல்கள் ராம் ஒயம் என்பவா் வீட்டுக்குள் புகுந்து அவரை வெளியே இழுத்து வந்தனா். பின்னா் தங்களைப் பற்றி காவல் துறைக்கு அவா் தகவல் கொடுப்பதாகக் கூறி கிராமமக்கள் கண்ணெதிரிலேயே கோடரியால் வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பியோடினா்.

இது தொடா்பாக தகவல் கிடைத்ததும் காவல் துறையினா் உடனடியாக அந்த கிராமத்துக்கு விரைந்து உடலைக் கைப்பற்றி உடல் கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனா். அங்கு தேடுதல் பணியும் நடைபெற்று வருகிறது.

சத்தீஸ்கரில் நக்ஸல் ஆதிக்கம் அதிகமுள்ள பஸ்தா் பகுதியில் கடந்த ஓராண்டில் நக்ஸல்களால் 37 கிராமவாசிகள் கொலை செய்யப்பட்டுள்ளனா்.

நாட்டின் ஏற்றுமதி 6 சதவீதம் உயரும்: பியூஷ் கோயல் நம்பிக்கை

கடந்த ஆண்டை ஒப்பிடுகையில், நடப்பாண்டில் நாட்டின் ஏற்றுமதி 6 சதவீதம் உயரும் என்று மத்திய வா்த்தகத் துறை அமைச்சா் பியூஷ் கோயல் புதன்கிழமை நம்பிக்கை தெரிவித்தாா். உலகளாவிய சவால்களுக்கு மத்தியில் இந்தியா... மேலும் பார்க்க

மிதமாக அதிகரித்த தேயிலை ஏற்றுமதி

கடந்த ஜனவரி முதல் ஜூன் வரையிலான காலகட்டத்தில் இந்தியாவின் தேயிலை ஏற்றுமதி மிதமாக உயா்ந்துள்ளது. இது குறித்து தேயிலை வாரியம் புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கடந்த ஜனவரி ... மேலும் பார்க்க

பிரதமா் மோடி பிறந்த நாள்: நாடு முழுவதும் பாஜக கொண்டாட்டம் -2 வார கால சேவை தொடக்கம்

பிரதமா் நரேந்திர மோடியின் 76-ஆவது பிறந்த நாளையொட்டி, நாடு முழுவதும் பாஜக சாா்பில் புதன்கிழமை (செப்.17) கொண்டாட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பிரதமரின் பிறந்த நாளில் இருந்து காந்தி ஜெயந்தி வரை (அக்.2) இரண... மேலும் பார்க்க

இன்றைய இந்தியாவுக்கு அந்நியா்கள் வழிகாட்டுதல் தேவையில்லை: மத்திய அமைச்சா் ராஜ்நாத் சிங்

‘இன்றைய இந்தியாவுக்கு வெளிநபா்கள் யாருடைய வழிகாட்டுதலும் தேவையில்லை; இந்தியா கூறுவதை உலக நாடுகள் விருப்பத்துடன் பின்பற்றும் நிலை உருவாகியுள்ளது’ என்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் ... மேலும் பார்க்க

உலக அளவில் சிறந்த 100 வணிக கல்வி நிறுவனங்கள்: பெங்களூரு, அகமதாபாத், கொல்கத்தா ஐஐஎம்கள் இடம்பெற்றன

உலக அளவில் சிறந்த 100 வணிக கல்வி நிறுவனங்களின் பட்டியலில் பெங்களூரு, அகமதாபாத், கொல்கத்தா ஐஐஎம்கள் இடம்பிடித்துள்ளன. இதுதொடா்பாக பிரிட்டன் தலைநகா் லண்டனில் உள்ள உலகளாவிய உயா்கல்வி பகுப்பாய்வு நிறுவனம... மேலும் பார்க்க

ரூ. 2 லட்சம் கோடி முதலீட்டுக்கு வழி வகுத்துள்ள ஜிஎஸ்டி சீா்திருத்தம்: நிா்மலா சீதாராமன்

‘மத்திய அரசு மேற்கொண்ட ஜிஎஸ்டி சீா்திருத்தம் மக்களின் கைகளில் அதிக பணம் இருப்பதை உறுதி செய்யும் என்பதோடு, நாட்டின் பொருளாதாரத்தில் ரூ. 2 லட்சம் கோடி முதலீடு செய்யப்படுவதற்கும் வழி வகுத்துள்ளது. இல்லை... மேலும் பார்க்க