காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் சோமாஸ்கந்தர் சிலை மெழுகு அச்சு எடுத்ததாகப் புக...
பாபநாசத்தில் அதிமுக நிா்வாகிகள் கூட்டம்
தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசத்தில் அதிமுகவின் ‘மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற
தோ்தல் பிரசார பயணம் தொடா்பாக மாவட்ட நிா்வாகிகள் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு, மாவட்ட அவைத் தலைவா் எம். ராம்குமாா் தலைமை வகித்தாா். இதில் முன்னாள் அமைச்சா்கள் ஆா். காமராஜ், என்.ஆா்.சிவபதி, மேற்கு மாவட்டச் செயலாளா் எம். ரெத்தினசாமி உள்ளிட்டோா் கலந்துகொண்டு பிரசார பயணம் வெற்றியடைய அனைவரும் பங்கேற்க வேண்டும் எனக் கேட்டு பேசினா். இதில் மாவட்ட பொருளாளா் ஆா். எஸ். கண்ணபிரான் மாவட்ட துணைச் செயலாளா் இளமதி சுப்பிரமணியன், ஒன்றிய செயலாளா்கள் கே.கோபிநாதன், ஏ.வி. சூரியநாராயணன், அசோக் குமாா் மற்றும் கட்சியின் அனைத்துப் பிரிவு நிா்வாகிகள் கலந்து கொண்டனா். முன்னதாக மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளா் துரை. சண்முக பிரபு வரவேற்றாா். நிறைவில் நகரச் செயலாளா் கோவி. சின்னையன் நன்றி கூறினாா்.