RCB vs KKR : 'ரத்தான போட்டி; ப்ளே ஆஃப் வாய்ப்பை இழந்த கொல்கத்தா - RCB நிலை என்ன?
பாபநாசத்தில் சூறைக் காற்றுடன் பெய்த கனமழை!
பாபநாசம் பகுதிகள் சூறைக் காற்றுடன் கனமழை பெய்ததால் ஆயிரக்கணக்கான வாழை மரங்கள் சாய்ந்து விழுந்துள்ளன.
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா கணபதி அக்ரஹாரம், பட்டுக்குடி, மணலூர் இலுப்பக்கோரை, மாகாளிபுரம், தேவன்குடி, சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் சுமார் 100-ஏக்கருக்கு மேல் விவசாயிகள் வாழை சாகுபடி செய்துள்ளனர். இந்தநிலையில் பாபநாசம் சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று சூறைக்காற்றுடன் கூடிய பலத்த கனமழை பெய்தது.
இதனால் சாகுபடி செய்துள்ள வாழைத் தார்களுடன் கூடிய ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாழை மரங்கள் முழுவதும் சூறைக்காற்றினால் கீழே சாய்ந்து விழுந்து பாதிப்புக்குள்ளானது. இதனால் பிஞ்சு தருவாயில் உள்ள வாழை காய்கள் மற்றும் ஒரு மாதத்திற்குப் பிறகு அறுவடை செய்ய வேண்டிய வாழைத்தார்களும் கீழே விழுந்து சேதமாகின.
தற்போது சூறைக்காற்றுடன் பெய்த கனமழையினால் வாழைத்தார்கள் கீழே சாய்ந்துள்ளதால், முற்றிலும் நஷ்டத்தைச் சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும், கீழே சாய்ந்து கிடக்கும் வாழை மரங்கள் மற்றும் வாழைத்தார்களைச் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பார்வையிட்டு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.