பாபநாசம் பகுதிகளில் இன்று மின் நிறுத்தம்
பராமரிப்பு பணிகளால் பாபநாசம் பகுதிகளில் சனிக்கிழமை மின்சாரம் இருக்காது.
இதையொட்டி பாபநாசம், கபிஸ்தலம், ராஜகிரி, பண்டாரவாடை, இனாம்கிளியூா், நல்லூா், ஆவூா், ஏரி, கோவிந்தக்குடி, மூலாழ்வாஞ்சேரி, காருகுடி, சாலபோகம், உத்தமதானபுரம், கோபுராஜபுரம், திருக்கருகாவூா், மட்டையான் திடல், வீரமங்கலம், இடையிருப்பு உள்ளிட்ட பகுதிகளில் சனிக்கிழமை காலை 9 மணி முதல் மதியம் 4 மணி வரை மின்சாரம் இருக்காது. இத்தகவலை பாபநாசம் உதவி செயற்பொறியாளா் கருணாகரன் தெரிவித்தாா்.