செய்திகள் :

பாலத்திலிருந்து 3.6 கிலோ வெடிப்பொருள் கைப்பற்றல்!

post image

மணிப்பூர் மாநிலம் சூராசந்திரப்பூர் மாவட்டத்திலுள்ள ஒரு பாலத்தின் அடியிலிருந்து 3.6 கிலோ அளவிலான வெடிப்பொருளும் ஆயுதங்களும் பாதுகாப்புப் படையினரால் கைப்பற்றப்பட்டது.

சூராசந்திரப்பூர் மாவட்டம் லெய்சாங் கிராமத்தில் இந்தியப் பாதுகாப்புப் படைகளான அசாம் ரைஃபில்ஸ் மற்றும் மணிப்பூர் மாநில காவல்துறை இணைந்து சோதனை மேற்கொண்டனர்.

அப்போது இம்பால்-சூராசந்திரப்பூர் வழியிலுள்ள ஒரு பாலத்தின் அடியிலிருந்து 3.6 கிலோ அளவிலான வெடிப்பொருளும், அதனை வெடிக்க செய்யக்கூடிய டெடோனேட்டர்களும் மற்றும் சில சாதனங்களும் மீட்கப்பட்டன.

இதையும் படிக்க: நடுவானில் முன்னாள் ராணுவ வீரரின் உயிரைக் காப்பாற்றிய மருத்துவர்!

இதுகுறித்து இன்று (டிச.25) ஸ்பியர் கார்ப்ஸ், தங்களது எக்ஸ் தளப்பதிவில் கூறியதாவது, தங்களுக்கு கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில் லெய்சாங் கிராமத்தில் சோதனை மேற்கொண்டதாகவும், அதில் கைப்பற்றப்பட்ட 3.6 கிலோ அளவிலான வெடிப்பொருளை செயல் இழக்கச் செய்ய நிபுணர்கள் வரவழைக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், மணிப்பூர் காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், நேற்று (டிச.24) சூராசந்திரப்பூர் மாவட்டத்தின் மோல்ஜோல் கிராமத்தில் பாதுகாப்புத் துறை மேற்கொண்ட சோதனையில் M16 ரக துப்பாக்கி ஒன்றும், 4 நாட்டுத் துப்பாக்கியும் அதற்கான குண்டுகளும் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெள்ள நிவாரணம் கோரி ஆர்ப்பாட்டம்: பி.ஆர்.பாண்டியன் உள்ளிட்ட விவசாயிகள் கைது

சிதம்பரம்: வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள், விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கக் கோரி, காட்டுமன்னார்கோவிலில் தடையை மீறி வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பி.ஆர்.பாண்டியன் உள்ளிட்ட 175 விவசாயிகள் க... மேலும் பார்க்க

4 நாள்களாக ஆழ்துளைக் கிணற்றுக்குள் சிக்கியுள்ள குழந்தை!

ராஜஸ்தான் மாநிலத்தில் கடந்த 4 நாள்களாக ஆழ்துளைக் கிணற்றுக்குள் சிக்கியுள்ள குழந்தையை மீட்கும் பணி இன்றும் (டிச.26) தொடர்கிறது.கோட்புட்லி-பெஹ்ரோர் மாவட்டத்திலுள்ள விவசாய நிலத்தில் கடந்த திங்களன்று (டிச... மேலும் பார்க்க

அண்ணா பல்கலை. போராட்டம்: போக்குவரத்து மாற்றம்!

சென்னை அண்ணா பல்கலைக்கழக பிரதான வாயில் முன்பு நடைபெற்று வரும் ஆர்ப்பாட்டம் காரணமாக கிண்டி சாலையில் இன்று(டிச. 26) போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலிய... மேலும் பார்க்க

குளிரில் நடுங்கி உயிரிழக்கும் குழந்தைகள்!

பாலஸ்தீன நகரமான காஸாவில் கடந்த 48 மணிநேரத்திற்குள் மூன்று குழந்தைகள் குளிரில் நடுங்கி உயிரிழந்துள்ளன. இஸ்ரேல் கடந்த 2023 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்திலிருந்து காஸா பகுதிகளின் மீது போர் தொடுத்து வருகின்றத... மேலும் பார்க்க

பாஜக போராட்டம்: தமிழிசை, பாஜக நிர்வாகிகள் கைது

சென்னை: அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதை கண்டித்து தமிழக பாஜகவினர் வள்ளுவர் கோட்டத்தில் அனுமதியின்றி போராட்டம் நடத்த முயன்றதால் முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், பாஜக மாநில துணைத... மேலும் பார்க்க

அம்பேத்கரின் நற்பெயரை,புகழை யாராலும் கெடுத்து விட முடியாது: சுப்பிரமணியன் சுவாமி பேட்டி

காஞ்சிபுரம்: இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கித் தந்த அம்பேத்கரின் நற்பெயரை, புகழை யாராலும் கெடுத்து விட முடியாது என காஞ்சிபுரத்தில் பாஜக மூத்த தலைவா் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்தாா்.காஞ்சிபு... மேலும் பார்க்க