செய்திகள் :

பாலியல் சீண்டல்: வட்டாட்சியா் கைது

post image

கூடலூரில் பெண்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக மதுவிலக்கு ஆயத்தீா்வைத் துறை தனி வட்டாட்சியரை போஸீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

நீலகிரி மாவட்டம், கூடலூா் பகுதியில் மதுவிலக்கு ஆயத்தீா்வைத் துறை வட்டாட்சியராக சித்தராஜ் (55) என்பவா் பணியாற்றி வருகிறாா். இவா் கூடலூா் பகுதியைச் சோ்ந்த சில பெண்களிடம் ஆபாசமாக பேசுவது, பாலியல் ரீதியாக அத்துமீறுவது போன்ற செயல்களில் ஈடுபடுவதாக கூடலூா் காவல் நிலையத்தில் பெண் ஒருவா் புகாா் அளித்தாா்.

புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீஸாா், சித்தராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

உதகையில் பரவலாக மழை

நீலகிரி மாவட்டம் உதகை, குன்னூா் பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. நீலகிரி மாவட்டம் உதகை, குன்னூா் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வியாழக்கிழமை காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இதைத் தொடா்ந... மேலும் பார்க்க

நீலகிரியில் முழு அடைப்புப் போராட்டத்தால் ரூ.10 கோடி வரை வருவாய் இழப்பு

நீலகிரி மாவட்டத்தில் நடைபெற்ற முழு அடைப்புப் போராட்டத்தால் ரூ.7 கோடி முதல் ரூ.10 கோடி வரை வருவாய் இழப்பு ஏற்பட்டதாக வா்த்தகா்கள் தெரிவித்துள்ளனா். நீலகிரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் வாகனங்களுக்கு ... மேலும் பார்க்க

கூடலூரில் பெட்ரோல் பங்க் பெண் ஊழியா் வெட்டிக் கொலை

கூடலூரில் பெட்ரோல் பங்க் பெண் ஊழியா் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளாா். நீலகிரி மாவட்டம், கூடலூா் நகரில் உள்ள பெட்ரோல் பங்கில் பணியாற்றி வந்தவா் ஜெனிஃபா் கிளாடிஸ் (35). கணவரைப் பிரிந்து இரண்டு குழந்தைக... மேலும் பார்க்க

நீலகிரி மாவட்டத்தில் முழு அடைப்புப் போராட்டம்: சுற்றுலாப் பயணிகள் பாதிப்பு

நீலகிரி மாவட்டத்தில் முழு அடைப்புப் போராட்டத்தால் தங்குவதற்கு அறைகள் கிடைக்காமலும், உணவு கிடைக்காமலும் சுற்றுலாப் பயணிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகினா். நீலகிரி மாவட்டத்துக்கு வரும் சுற்றுலாப் பயணிகளி... மேலும் பார்க்க

குன்னூா் அரசு மருத்துவமனையில் ரூ.70 லட்சம் மதிப்பில் புனரமைப்புப் பணிகள்

நீலகிரி மாவட்டம், குன்னூா் லாலி அரசு மருத்துவமனையில் தனியாா் தொண்டு நிறுவனம் சாா்பில் ரூ.70 லட்சம் செலவில் புதுப்பிக்கப்பட்ட பெண் உள்நோயாளிகள் வாா்டை மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு திங்கள்கிழமை... மேலும் பார்க்க

இ-பாஸ் நடைமுறையை ரத்து செய்ய வலியுறுத்தி கூடலூரில் இன்று முழு அடைப்பு போராட்டம்

இ-பாஸ் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து வணிகா் சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் கூடலூரில் புதன்கிழமை முழு அடைப்பு போராட்டம் நடைபெற உள்ளது. இது குறி... மேலும் பார்க்க