Kavin Honour Killing: 'யார் சொல்லி அந்தப் பொண்ணு வீடியோ வெளியிட்டுச்சு?'- Eviden...
பாலியல் தொல்லை கொடுத்த தாத்தா; எட்டி உதைத்துத் தள்ளிய பேத்திகள்; போக்சோ வழக்கில் முதியவருக்குச் சிறை
சிவகங்கை மாவட்டத்திலுள்ள ஒரு கிராமத்தில் வசித்து வந்த பெண்ணுக்கு 19 வயதிலும் 11 வயதிலும் இரண்டு மகள்கள். கணவர் வெளிநாட்டில் வேலை செய்ததால் 74 வயதான மாமனாரும் அந்த வீட்டில் வசித்து வந்தார்.

தினமும் அதிகாலை 5 மணிக்குப் பக்கத்திலுள்ள ஆலையில் வேலைக்கு அந்தப் பெண் சென்றுவிட, மகள்கள் இருவரும் தயாராகி கல்லூரிக்கும், பள்ளிக்கும் சென்று வந்தார்கள்.
சமீபகாலமாக மருமகள் வேலைக்குச் சென்றதும் வீட்டில் இருக்கும் முதியவர் கல்லூரியில் பயிலும் பேத்தியிடம் பாலியல் ரீதியாகத் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார். அவர் கல்லூரிக்குச் சென்றதும், பள்ளிக்குச் செல்லும் 11 வயது பேத்தியிடமும் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு வந்திருக்கிறார்.
முதலில் அதன் நோக்கம் புரியாத இரண்டு பெண் பிள்ளைகளும், அதன் விபரீதத்தைப் புரிந்துகொண்டு இரண்டு நாட்களுக்கு முன் தாத்தாவை எட்டி உதைத்து அடித்துத் தள்ளிவிட்டு, பள்ளி ஆசிரியையிடமும், தாயிடமும் தங்களுக்கு நடந்த தொந்தரவுகளைத் தெரிவித்துள்ளனர்.
அவர்கள் குழந்தைகள் நல அலுவலருக்குத் தகவல் கொடுத்தனர். அதைத் தொடர்ந்து தேவகோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தாய் புகார் அளிக்க, விசாரணை நடத்திய காவல்துறையினர் போக்சோ சட்டப்பிரிவில் கீழ் வழக்குப்பதிவு செய்து முதியவரை சிறையில் அடைத்தனர்.

நம் வீட்டிலோ, அருகாமையிலோ, பள்ளியிலோ, வேலை செய்யும் இடத்திலோ, பயணத்திலோ பெரியவர், சிறியவர், உறவினர், தெரிந்தவர் யாராக இருந்தாலும், நம் பெண் பிள்ளைகளிடமும், சிறுவர்களிடமும் எப்படி நடந்து கொள்கிறார்கள் என்பதைக் கண்காணிக்க வேண்டும். குழந்தைகளிடமும் மனம் விட்டுப் பேச வேண்டும்.