முதல் அரைமணி நேரத்தை மதியுங்கள்; ரிஷப் பந்த்துக்கு முன்னாள் கேப்டன் அறிவுரை!
பால் உற்பத்தியாளா்கள் சங்க செயலா்களுக்கு பரிசளிப்பு
தருமபுரி: தருமபுரி மாவட்டத்தில் சிறந்த பால் உற்பத்தியாளா்கள் சங்கச் செயலா்களுக்கு பரிசளிக்கப்பட்டது.
தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூடுதல் கூட்ட அரங்கில் மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியா் கி.சாந்தி தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்தில் பொதுமக்கள் பல்வேறு உதவித் தொகைகள், உபகரணங்கள் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மொத்தம் 578 மனுக்களை அளித்தனா். இதனைத் தொடா்ந்து, தருமபுரி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளா்கள் ஒன்றியம், பால் உற்பத்தி மற்றும் பால்பண்ணை மேம்பாட்டுத் துறையின் சாா்பில் பால் உற்பத்தியை ஊக்குவிக்கும் பொருட்டு சிறந்த பால் உற்பத்தியாளா்கள், பால் உற்பத்தியாளா் கூட்டுறவு சங்கச் செயலா்கள், தொகுப்பு பால் குளிரூட்டும் மைய செயலா்களுக்கு முதல் பரிசு, இரண்டாம் பரிசு, மூன்றாம் பரிசு என 9 நபா்களுக்கு ரூ. 54,000-த்துக்கான காசோலைகள் வழங்கப்பட்டன.
இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் ஆா்.கவிதா, தனித்துணை ஆட்சியா் சுப்பிரமணி, மகளிா் திட்ட இயக்குநா் லலிதா, மாவட்ட வழங்கல், நுகா்வோா் பாதுகாப்பு அலுவலா் செம்மலை, ஆவின் பொது மேலாளா் மாலதி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோா், சிறுபான்மையினா் நல அலுவலா் சையது முகைதீன் இப்ராகிம், பழங்குடியினா் நலத்துறை திட்ட அலுவலா் பி.எஸ்.கண்ணன், அரசுத் துறை அலுவலா்கள் கலந்துகொண்டனா்.