செய்திகள் :

பால் உற்பத்தியை அதிகரிக்க `ஊறுகாய் புல்’ - ஆய்வுக்கு இலவசமாக வழங்கும் புதுச்சேரி கால்நடைத் துறை

post image

கறவை பசுக்களுக்கு பசுந்தீவனம்தான் உயிர்த் தீவனம். ஆனால் மேய்ச்சல் நிலம் குறைந்துவிட்ட இந்த காலகட்டத்தில், கால்நடைகளை வளர்ப்பவர்கள் தீவனம் கிடைக்காமல் திண்டாடி வருகின்றனர். அது பால் உற்பத்தியில் பற்றாக்குறையை ஏற்படுத்துகிறது. அதனால் புதுச்சேரி விவசாயிகளுக்கு 75% சதவிகித மானியத்துடன் `சைலேஜ்’ எனப்படும் ஊறுகாய் புல்லை வழங்குவதற்கு கால்நடைத்துறை திட்டமிட்டிருக்கிறது. தொடர்ந்து, அதற்கான பரீட்சார்த்த முறை சோதனையை தற்போது துவக்கியிருக்கிறது.

ஊறுகாய் புல் | மாதிரிப் படம்

ஊறுகாய் புல்

அதனடிப்படையில் தட்டாஞ்சாவடி தொழிற்பேட்டை வளாகத்திலிருக்கும் தீவனப் பிரிவுக்கு, கூடப்பாக்கம், ராமநாதபுரம், கரிக்கலாம்பாக்கம், அபிஷேகப்பாக்கம், சோம்பேட் மற்றும் டி.என்.பாளையம் பகுதிகளைச் சேர்ந்த பால் உற்பத்தியாளர்களை வரவழைத்தது கால்நடைத்துறை. அங்கு அவர்களுக்கு தலா 50 கிலோ ஊறுகாய் புல் இலவசமாக வழங்கப்பட்டது. இந்த விவசாயிகள் தலா ஒரு கறவை பசுவை தேர்வு செய்து, அதற்கு தினம் 10 கிலோ வீதம் 15 நாட்களுக்கு ஊறுகாய் புல்லை கொடுக்க வேண்டும்.

அந்த 15 நாட்களில் பாலின் தரமும், கொழுப்பின் தரமும் கால்நடைத்துறை மற்றும் கூட்டுறவுத் துறையால் ஆய்வு செய்யப்படும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர். இதுகுறித்துப் பேசிய கால்நடைத்துறையின் இணை இயக்குநர் குமரன், ``சீசனில் அதிகமாக கிடைக்கும் சோளம் மற்றும் பசுந்தீவனங்களை காற்றுப் புகாத முறையில் கலக்க வேண்டும். பின்னர் பசுமை மாறாமல் ஊட்டமேற்றி சேமிக்கும் முறைதான் பதனைத்தாள் என்றும் ஊறுகாய் புல் என்றும் அழைக்கப்படுகிறது.

புதுச்சேரி
புதுச்சேரி அரசு

இதை கால்நடைகளுக்கு கொடுக்கும்போது தரமான பால் கிடைக்கும். பாலின் கொழுப்பு விகிதமும் அதிகமாக இருக்கும். இந்த ஊறுகாய் புல்லில் தாது உப்பு, புரதம், செரிமான ஊட்டச்சத்து மற்றும் கால்சியம் இருப்பதால்  மாடுகளின் உடல் நலமும், இனவிருத்தி செயல்திறனும் அதிகரிக்கும். `பேக்கிங்’ செய்யப்பட்ட இந்த ஊறுகாய் புல் ஒராண்டு வரை கெட்டுப் போகாது. அதனால் விவசாயிகள் இதனை வருமான தொழிலாகவும் எடுத்து செய்யலாம். இந்த ஆய்வு முடிந்ததும் 75% சதவிகித மானியத்தில் வழங்கும் நடைமுறை அமல்படுத்தப்படும்” என்றார்.

ஏக்கருக்கு ஒன்றரை லட்சம்; நிலக்கடலை, எள், ஆமணக்கு.. லாபம் கொடுக்கும் எண்ணெய்வித்து சாகுபடி பயிற்சி

எண்ணெய்வித்து பயிர்களின் சாகுபடி பரப்பு பெருமளவில் குறைந்து வருகிறது. ஆனால், எண்ணெய்க்கான தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வெளிநாட்டிலிருந்து பாமாயில் இறக்குமதி செய்து பயன்படுத்தும் நிலையில்தான... மேலும் பார்க்க

`விவசாயத்திற்கு வாங்கும் நிதியை சொந்த தேவைக்கு பயன்படுத்துகின்றனர்' - மகாராஷ்டிரா அமைச்சர் புகார்

மகாராஷ்டிராவில் ஏற்கெனவே விவசாயிகள் கடன் தொல்லையால் தொடர்ந்து தற்கொலை செய்து வருகின்றனர். தற்போது மகாராஷ்டிராவில் சில இடங்களில் பருவம் தவறிய மழையால் விவசாய பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு நாசிக்... மேலும் பார்க்க

முல்லைப்பெரியாறு அணை விவகாரம்: எம்புரான் படக் காட்சிகள் நீக்கம்; போராடிய விவசாயிகள் மகிழ்ச்சி

நடிகர் பிருத்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் 2019-ஆம் ஆண்டு வெளியாகி வரவேற்பைப் பெற்ற லூசிஃபர் படத்தின் 2 ஆம் பாகமாக எம்புரான் திரைப்படம் வெளியாகியுள்ளது.இந்தத் திரைப்படத்தில் 2002 குஜராத் கலவர... மேலும் பார்க்க

நிறமி வீடியோ வைரல்; தர்பூசணி வியாபாரம் பாதிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு; உணவுத்துறை அதிகாரி இடமாற்றம்

“தர்பூசணியை வெட்டி, அதைக் காட்டன் துண்டு அல்லது டிஷ்யூ பேப்பரை வைத்து துடைக்க வேண்டும். அப்போது அந்த காட்டான் அல்லது டிஷ்யூ பேப்பர் சிவப்பு நிறமாக மாறினால், அது கலப்படம் செய்யப்பட்ட தர்பூசணி. இயற்கையா... மேலும் பார்க்க

``சதீஷ்குமார் வீடியோக்காரர்களை அழைத்துக்கொண்டு சோதனை செய்வதுபோல் நாடகம்" - கொதிக்கும் வியாபாரிகள்

தர்பூசணியில் கலப்படம் செய்யப்படுவதாக வீடியோ வெளியிட்டு, பிறகு கலப்படம் இல்லை என்று பின்வாங்கிய சென்னை மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை அலுவலர் சதீஷ்குமாரை பணிநீக்கம் செய்ய வேண்டும் என்று வியாபாரிகள், விவ... மேலும் பார்க்க

தர்பூசணியின் சிவப்பு நிறத்துக்குக் காரணம் ரசாயன ஊசியல்ல; வதந்திகளை நம்பவே நம்பாதீர்கள் - வேளாண்துறை

“கடையில் வாங்கிய தர்பூசணியை சிறு துண்டாக வெட்டி, அதைக் காட்டன் துண்டு அல்லது டிஷ்யூ பேப்பரை கொண்டு துடைக்க வேண்டும். அப்படி துடைக்கும்போது துண்டு அல்லது டிஷ்யூ பேப்பர் சிவப்பு நிறமாக மாறினால், அது கல... மேலும் பார்க்க