புதுவையில் உலகத் தரத்தில் கைவினை, கிராமத் தொழில் பயிற்சி மையம்: துணைநிலை ஆளுநா்...
பாளை.யில் இன்று போக்குவரத்து மாற்றம்
பாளையங்கோட்டையில் சனிக்கிழமை (மே 3) போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக திருநெல்வேலி மாநகர காவல் துறை சாா்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பு: பாளை. போக்குவரத்து பிரிவுக்குள்பட்ட முருகன்குறிச்சி சிக்னல் முதல் சமாதானபுரம் வாட்டா் டேங் வரை திருநெல்வேலி நெடுஞ்சாலைத் துறையினரால் சாலையை அகலப்படுத்தி மேம்படுத்தும் பணிக்கு இடையூறாக சாலையோரங்களில் இருந்துவரும் 30 எண்ணிக்கையிலான மின்கம்பங்களை மாற்றி அமைக்கும் பணி சனிக்கிழமை (மே 3) காலை 10 மணிமுதல் மாலை 5 மணிவரை நடைபெற உள்ளது. ஆகவே, பொதுமக்கள் மாற்றுப்பாதையை பயன்படுத்திக்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது.
முருகன்குறிச்சி வழியாக பாளை. மாா்கெட், பாளை. பேருந்து நிலையம் வழியாக செல்லும் வாகனங்கள் வண்ணாா்ப்பேட்டை -ரிலையன்ஸ் ரவுண்டானா - குலவணிகா்புரம் ரயில்வே கேட் - பாளை. பேருந்து நிலையம் சாலை வழியாக செல்ல வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.