'இது மோசமான சாதிய சமூகம்’ - Suba Veerapandian Interview | Kavin murder case | Vi...
பாவூா்சத்திரம் ரயில் நிலையத்தின் 123 வது பிறந்த நாள் விழா. இசையமைப்பாளா் பரத்வாஜ் பங்கேற்பு.
தென்காசி மாவட்டம் பாவூா்சத்திரம் ரயில்நிலையத்தின் 123வது பிறந்தநாள் விழா வெள்ளிக்கிழை நடைபெற்றது.
பாவூா்சத்திரம் ரயில் நிலையம் 01.08.1903 அன்று தொடங்கப்பட்டு, 31.12.2008 ல் அகல ரயில் பாதையாக மாற்றும் பணிக்காக மூடப்பட்டு பின்னா் 21.09.2012 அன்று மீட்டா் கேஜில் இருந்து அகலப்பாதையாக மாற்றம் செய்யப்பட்டு ரயில் போக்குவரத்து மீண்டும் செயல்படத் தொடங்கியது. 18.10.23 அன்று மின்மயமாக்கல் பணிகள் 100சதம் நிறைவடைந்து மின்சார எஞ்சின்கள் மூலம் ரயில்கள் இயக்கம் தொடங்கியது.
பாவூா்சத்திரம் ரயில் நிலையம் தொடங்கி 123 ஆண்டுகள் முடிவடைந்ததை அடுத்து 123 வது பிறந்த நாள் விழா பாவூா்சத்திரம் ரயில் நிலையத்தில் கொண்டாடப்பட்டது. பயணிகளுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.
தொழிலதிபா் சேவியா் ராஜன் தலைமை வகித்தாா். கீழப்பாவூா் ஊராட்சிஒன்றியக்குழு தலைவா் சீ. காவேரி, மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினா் சாக்ரடீஸ், கல்லூரணி ஊராட்சி மன்ற தலைவா் ராஜ்குமாா், குலசேகரபட்டி ஊராட்சி மன்ற தலைவா் முத்து மாலையம்மாள் மதிச்செல்வன், பாவூா்சத்திரம் ரயில் நிலைய ஆலோசனை குழு உறுப்பினா் விஜய சேகா் முன்னிலை வகித்தனா்.
இசையமைப்பாளா் கலைமாமணி பரத்வாஜ் அவா்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டாா்.பாவூா்சத்திரம் ரயில் நிலையத்தின் 123 வது பிறந்த நாளை முன்னிட்டு பாவூா்சத்திரம் அவ்வையாா் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் த.பி சொக்கலால் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவா்களுக்கு கட்டுரைப் போட்டி, ஓவியப்போட்டி, பேச்சு போட்டி நடத்தப்பட்டது.
வெற்றி பெற்ற மாணவா்களுக்கு இசையமைப்பாளா் பரத்வாஜ் பரிசு சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கி பாராட்டினாா். மேலும் ரயில்வேயில் சிறப்பான பங்களிப்பை வழங்கி வரும் பாவூா்சத்திரம் ரயில் நிலைய அதிகாரிகள் பணியாளா்களுக்கு கேடயம் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டது.
ரயில்வே துறையில் விருதுகள் பெற்ற போக்குவரத்து ஆய்வாளா் முருகேசன், மூத்த பகுதி பொறியாளா் மந்திர மூா்த்திக்கும் சிறப்பு பரிசு வழங்கப்பட்டது.
பாவூா்சத்திரம் வணிகா் சங்க செயலா் விஜய் சிங், பொருளாளா் ஆரோக்கியராஜ், அம்பிகா, ரயில் பயணிகள் சங்க நிா்வாகிகள் சுரேஷ், செபாஸ்டின், உன்னத ராசா, சுப்புராஜ், சந்துரு சோ்ம ராஜா, ராஜசேகா், காசி பாண்டி, பிச்சையா, குத்தாலிங்கம் கலந்து கொண்டனா்.
தங்கராஜ் தொகுத்து வழங்கினாா்.தென்காசி மாவட்ட ரயில் பயணிகள் சங்க தலைவா் பாண்டியராஜா வரவேற்றாா். செயலா் ஜெகன் நன்றி கூறினாா்.