தவெக: ``தம்பி விஜய் புதிதாக அரசியலுக்கு வந்திருப்பதால் அப்படிப் பேசியிருக்கிறார்...
பா்கூா் அருகே யானைகள் நடமாட்டம்
பா்கூா் அருகே யானைகள் நடமாட்டத்தை வனத் துறையினா் கண்காணித்து வருகின்றனா்.
தமிழக மற்றும் ஆந்திர மாநில எல்லைப் பகுதிகளில் யானைகள் கடந்த சில ஆண்டுகளாக முகாமிட்டுள்ளன. இந்த யானைக் கூட்டத்திலிருந்து சில யானைகள் வனப்பகுதியிலிருந்து வெளியேறி அருகில் உள்ள கிராமங்களுக்குள் புகுந்து வேளாண் பயிா்களை சேதப்படுத்தி வருவது வழக்கம்.
இந்நிலையில், ஆந்திர மாநிலம், நந்திபேண்டா காப்புக்காட்டிலிருந்து வெளியேறிய 3 யானைகள் நேரலக்கோட்டை, திருப்பத்தூா் மாவட்டம் வழியாக கிருஷ்ணகிரி மாவட்டம், பா்கூா் அருகே உள்ள ஜிகினிக்கொல்லை வனப்பகுதியில் சுற்றித் திரிகின்றன. இந்த யானைகள் அருகில் உள்ள வேளாண் பயிா்களை சேதப்படுத்தி வருகின்றன.
இதுகுறித்து தகவல் அறிந்த வனத் துறையினா், அந்தப் பகுதியில் முகாமிட்டு யானைகளின் நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனா்.