செய்திகள் :

பா.ஜ.க-வினர் முருகனை ஒப்புக்குத் தூக்கிப் பிடிக்கிறார்கள்; நான் உளமாற தூக்கிப் பிடிக்கிறேன்- சீமான்

post image

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே உள்ள வையாபுரி கிராமத்தில் எஸ்.எஸ்.எல்.எஃப் ரியல் எஸ்டேட் உரிமையாளர் தொழிலதிபர் சக்திவேல் மகளுக்கு பூப்புனித நீராட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் நாம் தமிழர் கட்சி சீமான் உள்ளிட்ட பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களை சந்தித்த சீமான்,

"வரும் 2026, 2029, 2032 ஆகிய ஆண்டுகளில் நடைபெற இருக்கும் அனைத்து தேர்தல்களிலும் நாம் தமிழர் கட்சி தனித்து தான் போட்டியிடும். பா.ஜ.க-வினர் முருகனை ஒப்புக்குத் தூக்கிப் பிடிக்கிறார்கள். நான் உளமாற தூக்கிப் பிடிக்கிறேன். நான் முருகனின் பேரன். நான் எடுப்பதற்கும், அவர்கள் எடுப்பதற்கும் வித்தியாசம் உள்ளது. பா.ஜ.க நேற்று ஆரம்பிக்கப்பட்ட கட்சி கிடையாது. முருகன் நேற்று வரவில்லை. இவ்வளவு நாள் எடுக்காமல் என்ன பண்ணிக் கொண்டிருந்தீர்கள்?. இங்கே முருகனுக்கு ஒரு மதிப்பு இருக்கிறது. முருகனைத் தொட்டால் ஓட்டு வருமா என்று பார்க்கிறீர்கள்.

seeman

அந்த ஓட்டை நீங்கள் என்ன தொட்டாலும் `வேல் வேல் வெற்றிவேல்' என்றால் முருகன், அதன் பிறகு அவன் பேரன் எனக்குத்தான். இந்த மாநாட்டை அரசியலுக்கு பா.ஜ.க நடத்துகிறார்களா என்று கேட்கிறீர்கள். பிறகு, வேறு எதற்காக நடத்துகிறார்கள்?. அப்படி என்றால் அவர்கள் அப்பவே நடத்தியிருக்க வேண்டும். உத்தரபிரதேசத்தில் ராமரைத் தொடுவார்கள். கேரளாவில் ஐயப்பனைத் தொடுவார்கள். தமிழகத்தில் எங்களுடைய இறையப்பன் முருகனைத் தொட்டு இருக்கிறீர்கள். ஒரிசாவில் பூரி ஜெகநாதரைத் தொடுவார்கள். இதற்கெல்லாம் ஏமாறுகின்ற கூட்டம் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?. பி.ஜே.பி-யின் அரசியல் மத அரசியல் இல்லாமல், மக்கள் நல அரசியலா செய்கிறார்கள்?. பா.ஜ.க-வின் இந்த அரசியலை தமிழக மக்கள் ஏற்றுக்கொள்வார்களா என்று கேட்கிறீர்கள். அதற்கு வாய்ப்பில்லை ராஜா" என்றார்.

Pad Girl: "கல்வியை மேம்படுத்த முதல் அடி அரசியல்தான்" -ராகுல் காந்தி பாராட்டிய பீகார் பெண்ணின் பேச்சு

ராகுல் காந்தியின் சமீபத்திய பீகார் பயணம் சுவாரஸ்யமான உரையாடல்களுக்கு வழிவகுத்துள்ளது. கயாவில் மகிளா சம்வாத் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவர், சமூக வலைத்தளங்களில் 'Pad Girl' என அறியப்படும் ரியா பஸ்வான் எ... மேலும் பார்க்க

Andhra: "தொழிலாளர்களுக்குத் தினமும் 10 மணிநேர வேலை" - சந்திரபாபு அரசு முடிவு; வலுக்கும் எதிர்ப்பு

ஆந்திரா மாநிலத்தை ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தெலுங்கு தேசம் தலைமையிலான அரசு, தொழிலாளர் சட்டங்களைத் திருத்தி அனைத்து நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் கட்டாய வேலை நேரத்தை 9 மணி நேரத்திலிருந்து ... மேலும் பார்க்க

"எலான் மஸ்க் - ட்ரம்ப் பிரச்னையைத் தீர்த்து வைக்கத் தயார்" - ரஷ்யா கிண்டல்; மஸ்க்கின் பதில் என்ன?

உலகப் பணக்காரர் எலான் மஸ்க் மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இடையே பொதுவெளியில் பிரச்னை வெடித்து, வாக்குவாதங்கள் நடைபெற்றுவரும் சூழலில், இருவருக்கும் நடுவில் பேச்சுவார்த்தை நடத்தி அமைதியை நிலை... மேலும் பார்க்க

TVK: "கிளாம்பாக்கத்தைத் திறந்த நாளிலிருந்தே பிரச்னைதான்..." - திமுகவைக் கடுமையாகச் சாடும் தவெக

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் போதிய பேருந்து வசதிகள் இல்லாமல் பயணிகள் அவதியுறுவதாக திமுக அரசைக் கண்டித்து தவெக சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.CTR Nirmal Kumar - TVKதவெகவின் துணைப் பொதுச்செய... மேலும் பார்க்க

Trump Vs Musk : நட்பில் விரிசல்; 'எலான் மஸ்கிற்கு அடைக்கலம் தர தயார்' - ரஷ்யா கமென்ட்!

அமெரிக்க அதிபர் தேர்தல் பிரசாரத்தின் போது நல்ல பிணைப்புடன் இருந்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப் , உலகின் நம்பர் ஒன் பணக்காரர் எலான் மஸ்க், இப்போதும் எலியும், பூனையுமாக மாறி உள்ளனர். இதையடுத்து ட்ரம்பின் முன... மேலும் பார்க்க

அமித் ஷா மதுரை வருகை: டி.டி.வி தினகரனைச் சந்திக்க மறுப்பா? என்ன சொல்கிறார் தினகரன்?

நாளை நடைபெறும் பாஜக நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று மாலை மதுரை வருகிறார்.அப்போது கூட்டணிக் கட்சித்தலைவர்கள், சமூகத் தலைவர்கள் அவரைச் சந்திக்க முயன்று வருவதாகச் சொல்லப்... மேலும் பார்க்க