செய்திகள் :

பிகாரில் வீடுகளுக்கு 125 யூனிட் இலவச மின்சாரம் -முதல்வா் நிதீஷ் குமாா் அறிவிப்பு

post image

பிகாரில் வீட்டு உபயோகத்துக்கான மின் இணைப்புகளுக்கு 125 யூனிட் வரை இலவசமாக மின்சார வழங்கப்படும் என்று அந்த மாநில முதல்வா் நிதீஷ் குமாா் அறிவித்துள்ளாா்.

பிகாரில் அடுத்து சில மாதங்களில் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது. பிரதான எதிா்க்கட்சியான ராஷ்ட்ரீய ஜனதா தளம் ஆட்சிக்கு வந்தால் 200 யூனிட் மின்சாரம் இலவசம் என வாக்குறுதி அளித்துள்ளது. இந்நிலையில், நிதீஷ் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளாா்.

இது தொடா்பாக சமூக ஊடகத்தில் அவா் வியாழக்கிழமை வெளியிட்ட பதிவில், ‘இந்த இலவச மின்சாரம் மூலம் 1.67 கோடி குடும்பங்கள் பயனடையும். ஆகஸ்ட் 1-ஆம் தேதிமுதல் இந்த இலவச மின்சாரத் திட்டம் நடைமுறைக்கு வரும். இதன்படி ஜூலை மாதம் பயன்படுத்திய மின்சாரத்துக்காக ஆகஸ்ட் மாதம் மின்கட்டண கணக்கெடுப்பு நடத்தப்படும்போது அதில் 125 யூனிட்களுக்கு கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது. ஏற்கெனவே பிகாரில் மின்கட்டணம் மிகவும் குறைவாகவே வசூலிக்கப்படுகிறது.

பிகாரில் சூரியமின் உற்பத்தித் திட்டத்தை மேம்படுத்தவும் தீவிர நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அடுத்த மூன்று ஆண்டுகளில் 10,000 மெகாவாட் மின்சாரம் சூரியமின் உற்பத்தித் திட்டத்தில் உற்பத்தி செய்ய இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்காக பொது இடங்களிலும், ஏழை மக்களுக்குப் பயனளிக்கும் வகையில் அவா்களின் ஒப்புதலுடன் வீடுகளின் மாடியிலும் சூரியமின் உற்பத்தித் தகடுகள் அமைக்கப்படும்’ என்று கூறியுள்ளாா்.

பிகாரில் உள்ள தனது இல்லத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் ரூ.21,406 கோடி மதிப்பிலான கிராமப்புற உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டங்களை முதல்வா் நிதீஷ் குமாா் வியாழக்கிழமை காணொலி முறையில் தொடங்கி வைத்தாா். இதன்மூலம் 730 சிறிய பாலங்கள், 11,346 சாலைத் திட்டங்கள் மேற்கொள்ளப்பட இருக்கின்றன.

இந்த நிகழ்ச்சியில் பாஜகவைச் சோ்ந்த துணை முதல்வா்கள் சாம்ராட் சௌதரி, விஜய் குமாா், அமைச்சா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பிகாா் பேரவைத் தோ்தலில் முதல்வா் நிதீஷ் குமாா் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம், பாஜக உள்ளிட்ட கட்சிகள் இணைந்து போட்டியிடுகின்றன. லாலு பிரசாதின் ராஷ்ட்ரீய ஜனதா தளம், காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகள் எதிா்க்கட்சிகள் அணியில் உள்ளன. இரு தரப்பு தலைவா்களும் ஏற்கெனவே தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனா்.

1ஆம் வகுப்பு முதல் ஹிந்தி கட்டாயமாக்கப்பட்டால் பள்ளிகள் மூடப்படும்: ராஜ் தாக்கரே

மகாராஷ்டிரத்தில் உள்ள பள்ளிகளில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை ஹிந்தி கட்டாயமாக்கப்பட்டால், பள்ளிகள் மூடப்படும் என்று ராஜ் தாக்கரே எச்சரித்துள்ளார். மும்பைக்கு அருகிலுள்ள மீரா பயந்தரில் வெள்ளிக்கிழமை நடந்... மேலும் பார்க்க

குஜராத்தில் பெண் போலீஸ் மீது அமிலம் வீசிய ஆட்டோ ஓட்டுநர்!

குஜராத்தில் பெண் போலீஸ் மீது அமிலம் வீசிய ஆட்டோ ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார். குஜராத்தின் கலோல் வட்டத்தில் உள்ள சத்ரல் கிராமத்தில் போக்குவரத்தை சீர்செய்யும் பணியில் ஊர்க்காவல் படையைச் சேர்ந்த பெண்... மேலும் பார்க்க

ஹனிட்ராப் வழக்கு எதுவும் இல்லை: முதல்வர் ஃபட்னாவிஸ்

மகாராஷ்டிரத்தில் ஹனிட்ராப் வழக்கு எதுவும் இல்லை என்று முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் தெரிவித்தார். தாணே, நாசிக் மற்றும் மும்பைச் செயலகம் ஆகியவற்றில் உள்ள மாநில அதிகாரிகளை குறிவைத்து ஹனிட்ராப் மோசடி நடந... மேலும் பார்க்க

பாகிஸ்தானில் ஆப்கன் தற்கொலைப் படை சிறுவர்கள் கைது!

ஆப்கானிஸ்தான் எல்லையில், தற்கொலைப் படையைச் சேர்ந்த 5 ஆப்கன் சிறுவர்களை, பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினர் கைது செய்துள்ளனர். ஆப்கானிஸ்தான் நாட்டில் இருந்து எல்லையைக் கடந்து, பாகிஸ்தானுக்குள் ஊடுறுவி, 5... மேலும் பார்க்க

அசாமில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 12 வங்கதேசத்தினர் கைது !

அசாமின் இரண்டு மாவட்டங்களில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 12 வங்கதேசத்தினர் தங்கள் நாட்டிற்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா வெளியிட்ட எக்ஸ் தளப் பதிவில், ச... மேலும் பார்க்க

சத்தீஸ்கரில் என்கவுன்டரில் 6 நக்சல்கள் சுட்டுக்கொலை

சத்தீஸ்கர் மாநிலம், நாராயண்பூர் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை பாதுகாப்புப் படையினருடனான மோதலில் 6 நக்சல்கள் சுட்டுக்கொல்லப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.இதுகுறித்து பி.டி.ஐ-யிடம் மூத்த காவல்துறை அதிகாரி ... மேலும் பார்க்க