காங்கிரஸ் புதிய தலைமை அலுவலகம் திறப்பு: ராகுல், சோனியா பங்கேற்பு!
பிக் பாஸில் முதல்முறை... பணப்பெட்டியை எடுத்துச் செல்பவரும் போட்டியில் தொடரலாம்!
பிக் பாஸ் நிகழ்ச்சி வரலாற்றில் முதன்முறையாக பணப்பெட்டியை எடுத்துச் செல்பவரும் போட்டியில் தொடரலாம் என்ற புதிய விதியை அறிவித்துள்ளார் பிக் பாஸ்.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி இறுதி வாரத்தை எட்டியுள்ளது. கடந்த வாரம் பிக் பாஸ் வீட்டிலிருந்து அருண் பிரசாத், தீபக் ஆகியோர் குறைந்த வாக்குகளைப் பெற்றதன் அடிப்படையில் வெளியேற்றப்பட்டனர்.
தற்போது பிக் பாஸ் வீட்டில் முத்துக்குமரன், வி.ஜே. விஷால், ஜாக்குலின், செளந்தர்யா, பவித்ரா ஜனனி, ரயான் ஆகியோர் உள்ளனர்.
சென்ற வாரமே, பிக் பாஸ் வீட்டில் பணப்பெட்டி வைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்த வாரம் பணப்பெட்டி வைக்கப்பட்டுள்ளது.
அந்த பணப்பெட்டியில் வைக்கப்படும் தொகையானது தொடர்ந்து அதிகரிக்கப்படும், வழக்கமாக பெட்டியை எடுப்பவர் பணத்தை எடுத்துகொண்டு நிகழ்ச்சியில் இருந்து வெளியேறுவார்.
ஆனால், பிக் பாஸ் வரலாற்றில் முதன்முறையாக இந்த சீசனில் பெட்டியை எடுப்பவர்கள் கொடுக்கப்பட்ட நேரத்திற்குள் வீட்டுக்குள் வந்துவிட்டால் போட்டியை தொடரலாம் என்று இந்நிகழ்ச்சியின் புரோமோவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரும் ஞாயிற்றுக்கிழமை பிக் பாஸ் நிகழ்ச்சியின் இறுதிப் போட்டி நடைபெறுகிறது. இறுதிப் போட்டியில் வெற்றிப் பெறுபவருக்கு பிக் பாஸ் டைட்டில் வின்னர் என்ற பட்டமும் ரூ. 50 லட்சம் ரொக்கப் பரிசும் வழங்கப்படும்.