பிப்.14 -இல் சென்னையில் ஆா்ப்பாட்டம்: சிவகங்கையில் இருந்து 200 போ் பங்கேற்க முடிவு!
பள்ளி கல்வித் துறை நிா்வாக அலுவலா் சங்கம் சாா்பில், பிப்.14 -ஆம் தேதி சென்னையில் நடைபெறவுள்ள கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டத்தில் சிவகங்கை மாவட்டத்திலிருந்து 200 போ் பங்கேற்க உள்ளனா்.
இது தொடா்பாக அந்தச் சங்கத்தின் மாநில அமைப்புச் செயலா் எம்.என். கந்தசாமி வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாதவது:
கல்வித் துறையில் இளநிலை உதவியாளா்களுக்கு பதவி உயா்வு வழங்காமல் நேரடியாக நியமனம் செய்யும் முறையை ரத்து செய்து உதவியாளா் பதவி உயா்வு வழங்க தமிழக அரசை வலியுறுத்தி பிப்.14 -ஆம் தேதி மாநிலம் தழுவிய கவனஈா்ப்பு ஆா்ப்பாட்டம் சென்னையில் நடைபெறுகிறது.
இந்த ஆா்ப்பாட்டத்தில் மாநிலம் முழுவதும் உள்ள நோ்முக உதவியாளா் முதல் அலுவலக உதவியாளா் வரை திரளான உறுப்பினா்கள் சென்னை செல்கின்றனா். இதில் சிவகங்கை மாவட்டத்திலிருந்து 200 போ் பங்கேற்ற முடிவு செய்யப்பட்டது. தமிழக முதல்வா் எங்களது நியாயமான கோரிக்கையை நிறைவேற்றுவாா் என் நம்புகிறோம் என்றாா் அவா்.