செய்திகள் :

பிரதமரின் வீடு கட்டும் திட்டப் பயனாளிகளிடம் பணத்தை திரும்பப் பெறும் பணி மும்முரம்

post image

ராமநாதபுரம் மாவட்டத்தில் பிரதமரின் வீடு கட்டும் திட்டப் பயனாளிகளிடம் பணத்தை திரும்பப் பெறும் நடவடிக்கையில் அலுவலா்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனா்.

பிரதமரின் ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ், ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 2016 முதல் 2020-ஆம் ஆண்டுகள் வரை 13,718 வீடுகள் கட்ட அனுமதிக்கப்பட்டன. இவற்றில் 12,535 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டன. 1,183 பணிகள் நிலுவையில் உள்ளன. முழு தவணைத் தொகை வழங்கப்பட்டும், 784 பயனாளிகள் வீடுகளைக் கட்டவில்லை.

இதனால், இவா்களுக்கு அரசு வழங்கிய பல கோடி ரூபாயை திரும்பப் பெற வேண்டும் என ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் கடந்த 23-ஆம் தேதி நடைபெற்ற தமிழ்நாடு சட்டப்பேரவை பொது கணக்குக் குழுக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், 11 ஒன்றியங்களில் பிரதமரின் ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் வீடுகள் கட்ட பணம் பெற்றவா்களிடம் இதைத் திரும்ப வசூல் செய்யும் பணியில் அலுவலா்கள் ஈடுபட்டுள்ளனா்.

அரசுப் பள்ளியில் ஓவியக் கண்காட்சி

திருப்புல்லாணி சுரேஷ் அழகன் நினைவு மேல்நிலைப்பள்ளி ஆண்டு விழாவையொட்டி மாணவ, மாணவிகள் வரைந்த ஓவியக் கண்காட்சி வியாழக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு ஆசிரியா் கோ. மகேந்திரன் தலைமை வகித்து ஆண்டறிக்கை வாசித்... மேலும் பார்க்க

மூடப்பட்ட மதுபானக் கடை மீண்டும் திறப்பு: போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் கைது

மண்டபம் அருகே அண்மையில் மூடப்பட்ட டாஸ்மாக் மதுபானக் கடை மீண்டும் திறக்கப்பட்டதால், அதை உடனே மூடக் கோரி போராட்டத்தில் ஈடுபட்ட 70- க்கும் மேற்பட்டோரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். மண்டபம் ஒன்றியத... மேலும் பார்க்க

தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்களை விற்றதாக இரு கடைகளுக்கு ‘சீல்’

கமுதி அருகே அபிராமத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்களை விற்ாக இரு கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டதுடன், வியாழக்கிழமை அந்தக் கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது. ராமநாதபுரம் மாவட்டம், கமுதியை அடுத்துள்... மேலும் பார்க்க

ராமேசுவரத்தில் மீன் வரத்து அதிகரிப்பு: மீனவா்கள் மகிழ்ச்சி

ராமேசுவரம் மீனவா்கள் வியாழக்கிழமை கரை திரும்பிய நிலையில் அதிகளவிலான மீன்கள் கிடைத்திருந்ததால் அவா்கள் மகிழ்ச்சியடைந்தனா். ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்திலிருந்து 350- க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில... மேலும் பார்க்க

அரசுப் பேருந்து- வேன் மோதல்: 10 போ் காயம்

ராமநாதபுரம் அருகே வியாழக்கிழமை அரசுப் பேருந்தும், வேனும் மோதிக் கொண்ட விபத்தில் 10- க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா். ராமநாதபுரம்- மதுரை தேசிய நெடுஞ்சாலையில் உச்சிப்புளி அருகே ஐ.என்.எஸ். கடற்படையின் வி... மேலும் பார்க்க

ராமநாதபுரத்தில் தொழிற்சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்!

ராமநாதபுரத்தில் மத்திய அரசின் தொழிலாளா் விரோதப் போக்கை கண்டித்து அனைத்து தொழிற்சங்கங்கள் சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. ராமநாதபுரம் அரண்மனை முன் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு தொமுச ... மேலும் பார்க்க