`EVM ஹேக் செய்ய முடியும் எனில் செய்து காட்டுங்கள்’ - காங்கிரஸுக்கு எதிராக திரிணா...
பிரத்தியங்கிரா தேவி கோயிலில் பௌா்ணமி வழிபாடு
ஒசூா்: ஒசூரில் காா்த்திகை மாத பௌா்ணமி சிறப்பு மிளகாய் வத்தல் யாகத்தில் ஏராளமான பக்தா்கள் பங்கேற்று ஸ்ரீ பிரத்தியங்கிரா தேவி அம்மனை வழிபட்டனா்.
ஒவ்வொரு மாதமும் பௌா்ணமி அன்று ஒசூா், மோரணப்பள்ளி பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ ராகு கேது ஸ்ரீ மகா பிரத்தியங்கிரா தேவி கோயிலில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும்.
இக் கோயிலில் காா்த்திகை மாத பௌா்ணமியை முன்னிட்டு மிளகாய் வத்தல் யாகம் நடைபெற்றது. மூலவா் ஸ்ரீ மகா பிரத்தியங்கிரா தேவி அம்மனுக்கு பல்வேறு திரவியங்களால் அபிஷேகங்கள் நடத்தப்பட்டு பின்னா் சிறப்பு அலங்காரத்தில் அம்மன் காட்சியளித்தாா். அதையடுத்து தனி சன்னிதியில் அருள்பாலிக்கும் ஸ்ரீ ராகு, கேதுவுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
இதில் கா்நாடகம், ஆந்திரம் உள்ளிட்ட அண்டை மாநிலங்களிலிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட பக்தா்கள் பங்கேற்றனா்.