செய்திகள் :

பிரபல தமிழ் நடிகருக்கு அப்பாவாக நடிக்கும் மோகன்லால்?

post image

பிரபல நடிகருக்கு அப்பாவாக நடிக்க நடிகர் மோகன்லாலிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் மோகன்லால் எம்புரான், துடரும் படங்களின் வெற்றியால் உற்சாகத்தில் இருக்கிறார். அடுத்ததாக, இவர் நடிப்பில் ஹிருதயப்பூர்வம் வெளியாகவுள்ளது. சத்யன் அந்திக்காடு இயக்கும் இப்படத்தில் மாளவிகா மோகனன் நாயகியாக நடிக்கிறார்.

தொடர்ந்து, தமிழில் நடிகர் ரஜினிகாந்துடன் ஜெயிலர் - 2 படத்தில் நடிக்க உள்ளார்.

இந்த நிலையில், குட் நைட் படத்தின் இயக்குநர் விநாயக் சந்திரசேகரன் நடிகர் சிவகார்த்திகேயனை வைத்து புதிய படத்தை இயக்குவதாகவும் இப்படத்தில் அப்பா கதாபாத்திரத்தில் நடிக்க நடிகர் மோகன்லாலிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜில்லா படத்தில் நடிகர் விஜய்க்கு தந்தையாக நடித்த மோகன்லால் சிவகார்த்திகேயன் படத்தில் இணைந்தால் நன்றாக இருக்கும் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிக்க: டூரிஸ்ட் ஃபேமிலி படக்குழுவைப் பாராட்டிய சிவகார்த்திகேயன்!

ஷெல் தாக்குதலால் வீடுகள் சேதம் - புகைப்படங்கள்

ஜம்முவில் ட்ரோன் தாக்குதலால் சேதமடைந்த குடியிருப்பு கட்டிடத்தை ஆய்வு செய்யும் பாதுகாப்புப் படையினர்.தாக்குதலால் சேதமடைந்த வாகனங்களுக்கு அருகில் நிற்கும் பாதுகாப்புப் படையினர் மற்றும் பொதுமக்கள்.பாகிஸ்... மேலும் பார்க்க

நடிகர் சூப்பர்குட் சுப்பிரமணி காலமானார்!

நடிகர் சூப்பர்குட் சுப்பிரமணி புற்றுநோய் பாதிப்பால் இன்று காலமானார். தமிழ் சினிமாவில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக நடிகராக இருந்தவர் சூப்பர்குட் சுப்பிரமணி. (சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்தில் பணிபுரிந்ததா... மேலும் பார்க்க