தைத் திருநாளை முன்னிட்டு மயிலாப்பூரில் பிரமாண்ட கோலப்போட்டி... | Photo Album
பிராண பிரதிஷ்டை முதலாம் ஆண்டு விழா: யோகி ஆதித்யநாத் வழிபாடு!
உத்தரப் பிரதேசத்தின், அயோத்தியில் உள்ள ஸ்ரீராமர் கோயிலில் பிராண பிரதிஷ்டை செய்யப்பட்டு முதலாமாண்டு விழாவையடுத்து முதல்வர் யோகி ஆதித்யநாத் வழிபாடு மேற்கொண்டார்.
உச்ச நீதிமன்ற தீர்ப்பைத் தொடர்ந்து அயோத்தியில் உள்ள ஸ்ரீராம ஜென்மபூமியில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுவரும் கோயிலில் கடந்தாண்டு ஜனவரி 22-ம் தேதி மூலவர் பால ராமர் சிலை பிராண பிரதிஷ்டை செய்யப்பட்டது. பிரதமர் மோடி முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்ற இவ்விழாவுக்கு பின்னர் கோயிலில் பக்தர்கள் தரிசனம் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் பிராணப் பிரதிஷ்டை செய்யப்பட்டு முதாலாமாண்டு நிறைவு விழாவையடுத்து அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் பிராண பிரதிஷ்டை ஆண்டுவிழாவில் கலந்துகொண்டு ராமரின் அருளைப் பெற்றார்.
இதுதொடர்பாக அவரின் எக்ஸ் பதிவில்,
ஸ்ரீராமர் பிரதிஷ்டையின் முதலாமாண்டு விழாவை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட பிரதிஷ்டா-துவாதசி நிகழ்ச்சியில் கலந்துகொண்டது மகிழ்ச்சி
கடந்த 2024 ஜனவரி 22 அன்று பிரதமர் நரேந்திர மோடி ஸ்ரீராமர் கோயிலை திறந்துவைத்து முக்கிய சடங்குகளை நிகழ்த்தினார். இருப்பினும் இந்து நாள்காட்டியின் சீரமைப்பைத் தொடர்ந்து முதலாண்டு விழா இன்று கொண்டாடப்பட்டது.
கடந்த ஆண்டு, இந்த புனிதமான நிகழ்வு இந்து நாள்காட்டியின் பவுஷ் மாதத்தின் சுக்ல பக்ஷத்தின் போது கூர்ம துவாதசி அன்று கொண்டாடப்பட்டது. எனவே, இந்த ஆண்டு ஜனவரி 11 ஆம் தேதி சுக்ல பக்ஷம் வருவதால் இன்று கொண்டாடப்பட்டது.
இதற்கிடையில், அயோத்தியில் உள்ள ராமர் கோயிலில் பிராண பிரதிஷ்டை விழாவின் முதலாம் ஆண்டு விழாவை முன்னிட்டு உ.பி துணை முதல்வர் பிரஜேஷ் பதக் அனைவருக்கும் தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.