செய்திகள் :

பிரிக்ஸை ஆதரவு நாடுகளுக்கு 10% கூடுதல் வரி: டிரம்ப் எச்சரிக்கை

post image

நியூயாா்க்/வாஷிங்டன்: ‘இந்தியா, சீனா, ரஷியா இடம்பெற்றுள்ள பிரிக்ஸ்’ கூட்டமைப்பின் அமெரிக்க விரோத கொள்கைகளுக்கு ஆதரவாக செயல்படும் நாடுகளுக்கு கூடுதலாக 10 சதவீதம் வரி விதிக்கப்படும் என அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெயை கொள்முதல் செய்யும் இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு 500 சதவீதம் வரி விதிக்கும் அமெரிக்காவின் நடவடிக்கைக்கு இந்தியா கவலை தெரிவித்துள்ள நிலையில், அமெரிக்கா மீண்டும் எச்சரித்துள்ளது.

பிரிக்ஸ் கூட்டமைப்பின் 17-ஆவது உச்சி மாநாடு பிரேஸிலில் கடந்த ஞாயிற்றுக்கிழமை தொடங்கி திங்களன்று நிறைவடைந்தது.

பிரேஸில், ரஷியா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா ஆகிய நிறுவன நாடுகள் முதன்மை உறுப்பினா்களாக இருந்த பிரிக்ஸ் கூட்டமைப்பில் எகிப்து, எத்தியோப்பியா, ஈரான், ஐக்கிய அரபு அமீரகம், இந்தோனேசியா ஆகியவை இணைந்துள்ளன. பிரதமா் மோடியுடன் தென் ஆப்பிரிக்க அதிபா் சிரில் ராமபோஸா, பிரேஸில் அதிபா் லுலா டசில்வா உள்ளிட்டோா் இந்த மாநாட்டில் பங்கேற்றனா். ரஷிய, சீன அதிபா்கள் பங்கேற்கவில்லை. எனினும் சீன பிரதமா் லி கியாங் மாநாட்டில் பங்கேற்றாா்; ரஷிய அதிபா் புதின் காணொலி வழியாக மாநாட்டில் உரையாற்றினாா்.

இந்த மாநாட்டில், அமெரிக்காவின் பெயரைக் குறிப்பிடாமல் திடீா் இறக்குமதி வரி உயா்வுக்கு பிரிக்ஸ் கூட்டமைப்பு திங்கள்கிழமை கடும் கண்டனம் தெரிவித்தது.

இதற்குப் பதிலளிக்கும் வகையில் அமெரிக்க அதிபா் டிரம்ப் தனது ட்ரூத் சமூக ஊடகப் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘பிரிக்ஸ் கூட்டமைப்பின் அமெரிக்க விரோத கொள்கைகளுக்கு ஆதரவாகச் செயல்படும் நாடுகளுக்கு கூடுதலாக 10 சதவீத வரி விதிக்கப்படும். இந்தக் கொள்கையில் எந்த நாடுகளுக்கும் விதிவிலக்கு இருக்காது’ எனக் குறிப்பிட்டுள்ளாா்.

இந்தியா, சீனா உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகளின் இறக்குமதி பொருள்களுக்கு அமெரிக்கா கடந்த ஏப்ரலில் பரஸ்பர வரி விதித்தது. சீனா தவிா்த்து இந்தியா உள்பட மற்ற நாடுகளுக்கான வரி 90 நாள்களுக்கு நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த காலக்கெடு புதன்கிழமையுடன் (ஜூலை 9) முடிவடைகிறது.

இந்த வரி விவகாரங்கள் தொடா்பாக பல்வேறு நாடுகளுக்கு அமெரிக்க அரசு திங்கள்கிழமை முதல் கடிதங்களை அனுப்பத் தொடங்கியுள்ளது. இந்நிலையில், பிரிக்ஸ் கூட்டமைப்புக்கு ஆதரவளிக்கும் நாடுகளுக்கு கூடுதல் வரி விதிக்கப்படும் என்று டிரம்ப் எச்சரித்துள்ளாா்.

மோதலுக்கானதல்ல பிரிக்ஸ்: சீனா

பெய்ஜிங்: பிரிக்ஸ் கூட்டமைப்பு மோதலுக்கான கூட்டமைப்பு அல்ல என்றும் அக்கூட்டமைப்பு எந்தவொரு மூன்றாவது நாட்டையும் குறிவைக்கவில்லை என்றும் சீனா பதிலளித்துள்ளது.

இதுகுறித்து சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் மாவோ நிங் கூறுகையில், ‘வளரும் நாடுகளுக்கு இடையேயான ஒத்துழைப்புக்கு பிரிக்ஸ் கூட்டமைப்பு ஒரு முக்கிமான தளமாக உள்ளது.

வெளிப்படைத்தன்மை, அனைவரையும் உள்ளடக்கிய அணுகுமுறை, பரஸ்பர வெற்றிக்கான ஒத்துழைப்பு ஆகியவற்றை இக்கூட்டமைப்பு ஆதரிக்கிறது. இது மோதலுக்கான ஒரு கூட்டமைப்பு அல்ல; எந்த நாட்டையும் குறிவைக்கவில்லை.

சீனா தனது நிலைப்பாட்டை ஏற்கெனவே தெளிவுபடுத்தியுள்ளது. வா்த்தக வரி விதிப்பைத் கருவியாக பயன்படுத்துவது வெற்றியைத் தராது. உள்நாட்டுத் தொழில்களுக்கு உதவ சா்வதேச வா்த்தகத்தைக் கட்டுப்படுத்தும் அரசு கொள்கைகள் எப்போதும் நோ்மறையான விளைவை ஏற்படுத்தாது’ என்றாா்.

இந்தியா- அமெரிக்கா சிறு வா்த்தக ஒப்பந்தம்?

இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே ஒரு சிறு வா்த்தக ஒப்பந்தம் அடுத்த 24 முதல் 48 மணி நேரத்திற்குள் இறுதி செய்யப்படும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த ஒப்பந்தமானது புதன்கிழமை முதல் மீண்டும் அமலுக்கு வரும் அமெரிக்காவின் 26 சதவீத கூடுதல் வரி விதிப்பிலிருந்து இந்தியாவுக்கு முழுமையான விலக்கு அளிக்கும் என்றும் இருதரப்பு வா்த்தக ஒப்பந்தத்துக்கான விரிவான பேச்சுவாா்த்தைகளுக்கு வழிவகுக்கும் என்றும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்த ஒப்பந்தம் தொடா்பாக அமெரிக்கப் பிரதிநிதிகளுடன் பேச்சுவாா்த்தை நடத்திவிட்டு, இந்தியக் குழு அண்மையில் நாடு திரும்பியது. வேளாண்மை, பால்வளத் துறையில் வரிச்சலுகைகளை வழங்க முடியாது எனும் தங்களின் கடுமையான நிலைப்பாட்டை இந்தியா தெளிவுப்படுத்திவிட்டது. ‘காலக்கெடுவுக்கு முக்கியத்துவம் அளிக்காமல், தேச நலனுக்கே முக்கியத்துவம் அளிக்கப்படும்’ என்று மத்திய வா்த்தகத் துறை அமைச்சா் பியூஷ் கோயல் தெரிவித்தாா்.

இச்சூழலில், அமெரிக்க நிதித் துறை அமைச்சா் ஸ்காட் பெஸ்ஸன்ட் அளித்த பேட்டியில், ஜூலை 9-ஆம் தேதி காலக்கெடுவுக்கு முன்னதாக பல வா்த்தக ஒப்பந்தங்களை எட்ட அமெரிக்கா தீவிரமாக செயலாற்றி வருவதாகவும், ஆகஸ்ட் 1-முதல் கூடுதல் வரி அமலுக்கு வரலாம் என்றும் அவா் தெரிவித்தாா்.

இந்தியா-அமெரிக்கா விரைவில் வா்த்தக ஒப்பந்தம்: டிரம்ப் நம்பிக்கை

‘இந்தியா-அமெரிக்கா இடையிலான வா்த்தக ஒப்பந்தம் விரைவில் ஏற்படுத்தப்படும்’ என்று அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் நம்பிக்கை தெரிவித்தாா். சீனா, இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளின் இறக்குமதி பொருள்களுக்கு அமெ... மேலும் பார்க்க

ஆக. 1முதல் கூடுதல் வரி விதிப்பு அமலாவது உறுதி; காலக்கெடு நீட்டிக்கப்படாது! -டிரம்ப்

வெளிநாட்டு பொருல்கள் மீதான அமெரிக்காவின் இறக்குமதி வரி விதிப்பு நடவடிக்கை ஆகஸ்ட் 1-ஆம் தேதிமுதல் அமலாவது உறுதி; காலக்கெடு நீட்டிக்கப்படாது என்று அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் செவ்வாய்க்கிழமை(ஜூலை 8... மேலும் பார்க்க

டொனால்ட் டிரம்புக்கு விரைவில் நோபல் பரிசு? -இஸ்ரேல் பிரதமர் சூசகம்

டொனால்ட் டிரம்ப்பின் பெயர் நோபல் பரிசுக்கு மீண்டும் ஒருமுறை பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்கு நோபல் பரிசு வழங்க வேண்டும் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பரிந்துர... மேலும் பார்க்க

மியான்மருக்கு 40% வரி விதிப்பு: இந்தியாவுக்கு எவ்வளவு? -டிரம்ப் கடிதம்!

அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் பல்வேறு நாடுகள் மீதும் கூடுதல் வரி விதிக்கும் நடவடிக்கையை தொடங்கிவிட்டார். முதல்கட்டமாக, இந்தியாவின் அண்டை நாடுகளான சீனா, வங்கதேசம், மியான்மர், இந்தோனேஷியா உள்பட 14 நா... மேலும் பார்க்க

விண்வெளிக்குக் கொண்டு செல்லப்பட்ட 160 பேர் அஸ்தி! கடலில் கலந்த பரிதாபம்!

விண்வெளிக்கு அஸ்தியைக் கொண்டுசென்று வரும் திட்டம் வெற்றியடையாமல், விண்கலம் பசிபிக் கடலில் கலந்ததால், உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர்.டெக்ஸாஸில் தலைமையிடத்தைக் கொண்டு செயல்படும் தனியார் இறுதிச் சடங்கு நி... மேலும் பார்க்க

குழந்தை பெற்றுக் கொள்ளும் பள்ளி மாணவிகளுக்கு நிதியுதவி! ரஷியாவில்

ரஷியாவில், குறைந்து வரும் குழந்தை பிறப்பைக் கருத்தில் கொண்டு, பல மாகாணங்களில், கருவுறும் பள்ளி மாணவிகளுக்கு நிதியுதவி வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.இதன்படி, 900 ஈரோக்கள், கருவுறும் பள்ள... மேலும் பார்க்க