செய்திகள் :

பிரேதப் பரிசோதனை முடிந்து தகனம்... இறந்ததாக கூறப்பட்டவர் உயிருடன் வந்தது எப்படி? தேனியில் அதிர்ச்சி!

post image

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தாலுகாவிற்குட்பட்ட மலைகிராமமான தங்கம்மாள்புரம் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன் 37. இவருக்கு முருகேஸ்வரி என்ற மனைவியும், 7 வயது ஆண் குழந்தையும் உள்ளனர். மணிகண்டனுக்கு இருந்த குடிப்பழக்கத்தால் மனைவி கோவித்துக் கொண்டு ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள அவரின் தாயார் வீட்டிற்கு குழந்தையுடன் சென்றுவிட்டார்.

இந்நிலையில் மயிலாடும்பாறை அருகே தங்கம்மாள்புரத்தில் உள்ள தனது பெற்றோரான தங்கமலை, செல்வம்மாள் வசித்துவரும் வீட்டில் மணிகண்டன் வசித்துவந்தார். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தங்கமலை மற்றும் மணிகண்டன் கூலி வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு வெளியூர் சென்றுள்ளார்.

மணிகண்டன்

செல்வம்மாள் வீட்டில் கணவரும் மகனும் இல்லாததால் நவம்பர் 10 ஆம் தேதி வீட்டை பூட்டி விட்டு தனது மகள் வீட்டிற்கு சென்றுவிட்டார். நவம்பர் 13 ஆம் தேதி காலை தங்கம்மாள்புரத்தில் உள்ள வீட்டில் இருந்து தூர்நாற்றம் வீசுவதாக அக்கம் பக்கத்தினர் செல்வம்மாளுக்கு தகவல் கொடுத்துள்ளனர். அவர் வீட்டிற்கு வந்து பார்த்தபோது கட்டிலுக்கு அடியில் அழுகிய நிலையில் சடலம் கிடந்துள்ளது. குடிபோதையில் மகன் மணிகண்டன் இறந்துகிடப்பதாக, அவரின் மனைவிக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதற்கிடையே போலீஸாருக்கும் தகவல் கொடுக்க கடமலைக்குண்டு போலீஸார் நிகழ்விடத்திற்கு வந்து விசாரித்தனர். சடலத்தை மீட்ட போலீஸார் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி, உடலை ஒப்படைத்தனர். அதன்பிறகு தங்கம்மாள்புரத்தில் வைத்து உடல் தகனம் செய்யப்பட்டது.

இந்நிலையில் ஒரு மாதத்திற்கு பிறகு தங்கம்மாள்புரத்திற்கு இறந்ததாக கூறப்பட்ட மணிகண்டன் வந்துள்ளார். அவரை பார்த்த கிராம மக்கள் ஆச்சரியத்துடனும் அச்சத்துடனும் பார்த்துள்ளனர். தாய், மனைவியிடம் விசாரித்தபோது, தான் கும்பகோணம் பகுதியில் கூலி வேலைக்கு சென்றுவிட்டு திரும்பியதாகக் கூறியுள்ளார்.

மணிகண்டன்

இத்தகவல் உடனடியாக கடமலைக்குண்டு போலீஸாருக்கு தெரிவிக்கப்பட்டதும், போலீஸார் நிகழ்விடத்துக்கு வந்து மணிகண்டனிடம் விசாரித்தனர். அப்போது இறந்துபோனது தங்கமலையாக இருக்குமோ என விசாரிக்கத் தொடங்கியுள்ளனர்.

இதற்கிடையே, உடல் அழுகிய நிலையில் இருந்ததால் செல்வம்மாள், முருகேஸ்வரி ஆகியோர் உயிரிழந்தது மணிகண்டன் எனக் கூறியிருக்கலாம். ஆனால் செல்வம்மாள் வீட்டில் கிடந்த உடல் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டதா இல்லையா, பிரேதப் பரிசோதனையில் உயிரிழந்தவரின் வயது, எப்படி இறந்தார் உள்ளிட்ட விவரங்கள் போலீஸாருக்கு தெரியாமல் போயிருக்குமா, உண்மையில் உயிரிழந்தது தங்கமலை தானா அல்லது வேறு நபரா, தங்கமலை எங்குள்ளார், தற்கொலையா, கொலையா எனப் பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளன. இதுகுறித்து போலீஸாரிடம் கேட்டபோது, விசாரித்து கொண்டிருக்கிறோம். டிஎன்ஏ சோதனையும் நடந்த உள்ளோம். முழுமையான விசாரணை முடிந்தபிறகே என்ன நடந்தது என்பது குறித்து கூறமுடியும் என்றனர்.

Christmas: திருடிய குழந்தை இயேசு சிலையை மீண்டும் வைத்த திருடர்... ஒரு விநோத சம்பவம்!

அமெரிக்காவில் திருடிய குழந்தை இயேசு சிலையை, திருடிய நபர் மன்னிப்பு வேண்டும் குறிப்புடன் மீண்டும் வைத்துச் சென்ற சம்பவம் நடைபெற்றுள்ளது. அமெரிக்காவின் கொலரோட மாகாணத்தில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது கிற... மேலும் பார்க்க

பாலியல் கொடுமை முயற்சி தோல்வி; சிறுமிகளை தண்ணீர் டிரம்மில் மூழ்கடித்து கொலை - சமையல்காரர் கைது!

புனேயில் மைனர் சிறுமிகள் இரண்டு பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். புனே ராஜ் குரு நகரில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் முதல் மாடியில் வசித்து வந்தவர் அஜய்தாஸ் (54). அதே கட்டடத்தில் தனது பெற்றோருட... மேலும் பார்க்க

தவறாக நடக்க முயன்ற நபர்; சாமர்த்தியமாகச் செயல்பட்ட பெண்... தர்ம அடியுடன் போலீஸில் ஒப்படைப்பு!

செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்தவர் ரமணி (பெயர் மாற்றம்). இவரின் கணவர் 5 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். அதனால் இரண்டு மகள்கள், ஒரு மகனுடன் ரமணி, வாடகை வீட்டில் வசித்து வருகிறார். மகள்களும் மகனும... மேலும் பார்க்க

'பெண்ணைப் பெற்ற தகப்பன் என்ற முறையில்...' - அண்ணா பல்கலை., மாணவி விவகாரம் குறித்து எம்.எஸ்.பாஸ்கர்

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில்மாணவி ஒருவர் பாலியல் அத்துமீறலுக்கு ஆளான சம்பவம் தமிழகமெங்கும் பலத்த அதிர்வலைகளை உருவாக்கியிருக்கிறது. அதிமுகஉள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இதைக் கண்டித்து போராட்டங்களைநடத்தி வ... மேலும் பார்க்க

திருப்பத்தூர் : வாழைத் தோப்பில் ஆண் நண்பருடன் சிக்கிய மனைவி; வேலைக்கு சென்ற கணவன் கொடுத்த ட்விஸ்ட்

திருப்பத்தூர் அருகிலுள்ள கிராமம் ஒன்றைச் சேர்ந்த 39 வயது பெண் அவர். இவரின் கணவர் கட்டட வேலைச் செய்துவருகிறார்.இவர்களுக்கு 4 மகள்கள் உள்ளனர். இதில், மூன்றுப் பேருக்குத் திருமணமாகிவிட்டது. ஒரு மகள் மட்ட... மேலும் பார்க்க

குஜராத்: போலி மருத்துவ மாஃபியா; 10-ம் வகுப்பு படித்துவிட்டு மக்களுக்குச் சிகிச்சை.. சிக்கிய கும்பல்!

குஜராத் மாநிலம், சூரத்தில் தகுந்த கல்வித்தகுதி இல்லாமல் மருத்துவம் பார்த்துவந்த ஓர் ஆண் மற்றும் ஒரு பெண்ணைக் காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர். சூரத் நகரில் போலி டாக்டர்களை கட்டுப்படுத்த எடுக்கப்படும் த... மேலும் பார்க்க