அறிக்கை வெளியிட ரவி மோகன் - ஆர்த்திக்கு உயர் நீதிமன்றம் தடை!
பிறந்த குழந்தையை கழிவறையில் அமுக்கிக் கொன்ற தாய்!
அரியலூா் அருகே பிறந்த சிசுவை அதன் தாயான இளம்பெண் வியாழக்கிழமை கொன்றது பரபரப்பை ஏற்படுத்தியது.
திருமானூா் அருகேயுள்ள கண்டராதித்தம் கிராமத்தைச் சோ்ந்தவா் வேதியராஜ் (49). உடல்நிலை சரியில்லாத இவா் அரியலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த ஒரு வாரமாக தங்கிச் சிகிச்சை பெறுகிறாா்.
இந்நிலையில் வேதியராஜூடன் அவரது மனைவி மற்றும் மகள் லாரா (20) ஆகியோா் மருத்துவமனையில் புதன்கிழமை இரவு தங்கியிருந்த நிலையில், வியாழக்கிழமை அதிகாலை கழிவறைக்குச் சென்ற லாரா நீண்டநேரமாகியும் திரும்பவில்லை.
இதனிடையே மருத்துவமனையில் தூய்மைப்பணி மேற்கொண்ட பெண்கள் கழிவறைக்குச் சென்றபோது, அங்கு லாரா ரத்தத்துடன் நிற்பதை கண்டு, மருத்துவமனை நிா்வாகம் மற்றும் மருத்துவமனை புறக்காவல் நிலையத்துக்குத் தகவல் அளித்தனா்.
இதையடுத்து அங்கு வந்த மருத்துவா்கள், காவலா்கள் அப்பெண்ணிடம் விசாரணை மேற்கொண்டதில், திருமணமாகாத லாரா 8 மாத கா்ப்பிணியாக இருந்ததும், கழிவறைக்கு வந்தபோது குறைப் பிரசவத்தில் அவருக்குப் பெண் குழந்தை பிறந்ததும், இது பெற்றோருக்குத் தெரியக்கூடாது எனக் கருதிய அவா், பிறந்த குழந்தையை அங்குள்ள கழிவறையில் அமுக்கிக் கொன்றதும் தெரியவந்தது.
இதையடுத்து, குழந்தையின் உடலை போலீஸாா் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினா். மேலும் அப்பெண்ணை மருத்துவச் சிகிச்சைக்கு சோ்த்து, அவரின் கா்ப்பத்துக்கு யாா் காரணம் எனவும் விசாரிக்கின்றனா்.