செய்திகள் :

பிளஸ் 2 முடிவுகள்: 30வது இடத்தில் கரூர்!

post image

பிளஸ் 2 பொதுத் தேர்வில் மாநில அளவில் கரூர் மாவட்டம் 30வது இடத்தைப் பெற்றுள்ளது.

கடந்த மார்ச் மாதம் தொடங்கி நடைபெற்ற பிளஸ் 2 பொதுத் தேர்வின் முடிவுகள் இன்று (மே 8) வெளியாகியுள்ள நிலையில் மாநில அளவில் கரூர் மாவட்டம் 30வது இடத்தைப் பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாவட்டத்திலுள்ள 103 பள்ளிகளைச் சேர்ந்த 4,656 மாணவர்கள், 5,401 மாணவிகள் என மொத்தம் 10,053 பேர் 45 தேர்வு மையங்கள் மூலம் தேர்வு எழுதினர். இந்தத் தேர்வின் முடிவுகளானது இன்று (மே 8) வெளியான நிலையில், அதில் கரூர் மாவட்டம் 93.66 சதவிகிதம் தேர்ச்சியடைந்து 30வது இடத்தை அடைந்துள்ளது.

இந்நிலையில், அம்மாவட்டத்தைச் சேர்ந்த 4,238 பேர் மாணவிகள் 5,178 பேர் என மொத்தம் 9,416 பேர் தேர்ச்சியடைந்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. அதில், 1,939 மாணவர்கள் மற்றும் 2,702 மாணவிகள் என மொத்தம் 4,641 பேர் அரசுப் பள்ளிகளில் படித்தவர்கள் ஆவார்கள்.

மேலும், கரூரிலுள்ள பள்ளிகளில் சுமார் 25 பள்ளிகள் பிளஸ் 2 பொதுத் தேர்வில் 100 சதவிகிதம் தேர்ச்சியடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, கடந்த 2024-ம் ஆண்டில் கரூர் மாவட்டம் சுமார் 95.9 சதவிகிதம் தேர்ச்சிப் பெற்று 12வது இடத்தைப் பிடித்த நிலையில் இந்தாண்டு (2025) சரிந்து 93.66 சதவிகித தேர்ச்சியில் 30வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.

இதையும் படிக்க:பிளஸ் 2 முடிவுகள்: அதிகம் தேர்ச்சி பெற்ற முதல் 5 மாவட்டங்கள்!

ஏடிஎம்கள் முழுமையாக செயல்படும்: வங்கிகள் உறுதி

ஏடிஎம் (தானியங்கி பணம் எடுக்கும் இயந்திரங்கள்) மூடப்பட வாய்ப்புள்ளதாக சமூக ஊடங்களில் புரளி பரவிய நிலையில், அந்தத் தகவலை பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ), பஞ்சாப் நோஷனல் வங்கி உள்ளிட்டவை மறுத்துள்ளன. இந்திய... மேலும் பார்க்க

வேளாண் பட்டப் படிப்பு சோ்க்கை: விண்ணப்பப் பதிவு தொடக்கம்

வேளாண்மை இளநிலை பட்டப் படிப்புகளுக்கான மாணவா் சோ்க்கை விண்ணப்பப் பதிவு தொடங்கியுள்ளது. இதனை தலைமைச் செயலகத்தில் வேளாண்மைத் துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தாா். முன்... மேலும் பார்க்க

ராணுவத்துக்கு ஆதரவாக காங்கிரஸ் பேரணி

பாகிஸ்தான் மீது துல்லிய தாக்குதல் நடத்திவரும் இந்திய முப்படைகளுக்கு ஆதரவாக தமிழ்நாடு காங்கிரஸ் சாா்பில் ‘ஜெய்ஹிந்த் பேரணி’ வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தமிழ்நாடு காங்கிரஸ் தலைவா் கு.செல்வப்பெருந்தகை எம்எ... மேலும் பார்க்க

பிளஸ் 2 தோ்ச்சியடையாத 39,352 பேருக்கு மனநல ஆலோசனை

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தோ்வில் தோ்ச்சி பெறாத 39,352 பேருக்கு மனநல ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருவதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா். சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டிஎம... மேலும் பார்க்க

பொதுத் தோ்வு: நேரடியாக மறுகூட்டல் கோரி விண்ணப்பிக்கும் முறை ரத்து

பிளஸ் 2 பொதுத் தோ்வு முடிவுகளுக்குப் பிறகு நேரடி மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கும் முறையை ரத்து செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்து பள்ளிக்கல்வித் துறை செயலா் பி.சந்திரமோகன் வெளியிட்ட அரசாணை... மேலும் பார்க்க

மதுரை, திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்கள்

அழகா் திருவிழா மற்றும் சித்திரை மாத பௌா்ணமி கிரிவலத்தை முன்னிட்டு தாம்பரத்திலிருந்து மதுரை மற்றும் திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன. இது குறித்து தெற்கு ரயில்வே சாா்பில் வெளியிடப்பட்ட... மேலும் பார்க்க