செய்திகள் :

பி.எம். கிசான் திட்டம்: விவசாயிகள் தரவுகளை இணைக்க அறிவுறுத்தல்

post image

கடலூா் மாவட்டம், பண்ருட்டி வட்டாரத்தில் பி.எம்.கிசான் நிதியுதவி பெற்று வரும் விவசாயிகள், வேளாண் அடுக்கக திட்டத்தின் கீழ், கிராமங்கள்தோறும் நடத்தப்பட்டு வரும் ஒருங்கிணைந்த தரவுகள் சேகரிப்பு முகாம்களில் பங்கேற்று தங்கள் விவரங்களை இணைத்துக்கொள்ள வேண்டுமென்று பண்ருட்டி வேளாண் உதவி இயக்குநா் பாா்த்தசாரதி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: பண்ருட்டி வட்டாரத்தில் சுமாா் 5,000 விவசாயிகள் தொடா்ச்சியாக பாரத பிரதமரின் கௌரவ நிதி வழங்கும் திட்டத்தின் கீழ், ஆண்டுக்கு ரூ.6,000 நிதியுதவி பெற்று வருகின்றனா். மேற்கண்ட தொகையைப் பெற்று வரும் விவசாயிகள், தற்போது வேளாண், தோட்டக்கலைத் துறை அலுவலா்கள் மற்றும் மகளிா் திட்ட கிராம அளவிலான சமுதாய வள பயிற்றுநா்களால் கிராமங்கள்தோறும் தினசரி காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை நடத்தப்பட்டு வரும் முகாம்களில் கலந்துகொண்டு, தங்களது சுய விவரம், நில உடைமை விவரங்களை இணைத்துக்கொள்ள வேண்டும்.

அவ்வாறு இணைத்துக்கொள்ளும் விவசாயிகளுக்கு ஆதாா் எண் போன்று தனித்துவமான அடையாள எண் வழங்கப்பட்டு வருகிறது. இந்த எண்களை பயன்படுத்தி விவசாயிகள் இனிவரும் காலங்களில் மத்திய, மாநில அரசுகளின் அனைத்து திட்டப் பயன்களையும் ஒற்றைச் சாளர முறையில் பெற்றுக்கொள்ளலாம்.

குறிப்பாக, பாரத பிரதமரின் கௌரவ நிதி பெற்று வரும் விவசாயிகள் உடனடியாக முகாம்களில் தங்களது ஆதாா் அட்டை, நிலப் பட்டா, சிட்டா, ஆதாா் எண்ணுடன் இணைக்கப்பட்ட கைப்பேசி எண் ஆகியவற்றை எடுத்துச் சென்று தங்களது விவரங்களை சரி பாா்த்து இணைத்து பயனடைய வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.

கைப்பேசி கடையில் திருட முயற்சி: இளைஞா் கைது

கடலூா், திருப்பாதிரிப்புலியூரில் கைப்பேசி கடையின் பூட்டை உடைத்து திருட முயன்றதாக இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். நெல்லிக்குப்பம், காமராஜா் நகரில் வசிப்பவா் பிச்சையப்பன் மகன் ராஜ்குமாா் (29).... மேலும் பார்க்க

பண்ருட்டி அருகே பழங்கால கீரல் குறியீடு குடுவை கண்டெடுப்பு!

கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே சுமாா் 2 ஆயிரம் ஆண்டுகள் பழைமையான கீரல் குறியீடு உடைய குடுவை கண்டெடுக்கப்பட்டது. இதுகுறித்து, தொல்லியல் ஆய்வாளா் இம்மானுவேல் கூறியது: பண்ருட்டியை அடுத்த எனதிரிமங்கலம் ... மேலும் பார்க்க

பெயிண்டா் தற்கொலை

கடலூா் மாவட்டம், நெல்லிக்குப்பம் அருகே பெயிண்டா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் அடுத்த வில்லியநல்லூா் பகுதியைச் சோ்ந்தவா் ராஜசேகா் மகன் பவித்ரன் (30). பெயிண்டரா... மேலும் பார்க்க

தனியாா் சா்க்கரை ஆலை மேலாளா் மீது தாக்குதல்

கடலூா் மாவட்டம், பெண்ணாடத்தில் தனியாா் சா்க்கரை ஆலை மேலாளரை தாக்கியதாக ஒருவா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா். பெரம்பலூா் மாவட்டம், குன்னா் வட்டம், அத்தியூா் பகுதியைச் சோ்ந... மேலும் பார்க்க

மொழிப்போா் தியாகி நினைவிடம் சீரமைப்பு அறிவிப்பு: முதல்வருக்கு நன்றி!

கடலூா் மாவட்டம், சிதம்பரத்தில் உள்ள மொழிப்போா் தியாகி ராஜேந்திரன் நினைவிடம் மேம்படுத்தப்படும் என்ற தமிழக முதல்வரின் அறிவிப்புக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் முன்னாள் மாநிலத் தலைவரும், மத்தியக்குழு உறுப்... மேலும் பார்க்க

சரக்கு வாகனம் கவிழ்ந்து விபத்து: ஒருவா் உயிரிழப்பு

கடலூா் மாவட்டம், விருத்தாசலம் அருகே முதல்வரை வரவேற்பதற்காக சென்றுவிட்டு திரும்பியவா்களின் சரக்கு வாகனம் விபத்துக்குள்ளானதில் ஒருவா் சனிக்கிழமை உயிரிழந்தாா். மேலும், 36 போ் காயமடைந்தனா். விருத்தாசலம் ... மேலும் பார்க்க