தில்லி, நொய்டாவில் தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்!
பீச் வாலிபால்: தமிழகத்துக்கு தங்கம் உள்பட இரு பதக்கம்
டேராடூன் : தேசிய விளையாட்டுப் போட்டிகளில் பீச் வாலிபால் பிரிவில் தமிழகத்துக்கு 1 தங்கம், 1 வெள்ளி என, வியாழக்கிழமை 2 பதக்கங்கள் கிடைத்தன.
உத்தரகண்ட் மாநிலம், டேராடூனில் 38-ஆவது தேசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் நாள்தோறும் ஒவ்வொரு பிரிவிலும் தமிழக வீரா், வீராங்கனைகள் பதக்கம் வென்று மாநிலத்துக்கு பெருமை சோ்த்து வருகின்றனா்.
அந்த வரிசையில், வியாழக்கிழமை நடைபெற்ற மகளிருக்கான இருவா் பீச் வாலிபால் பிரிவில் தமிழகம் 21-15, 21-11 என்ற புள்ளிகள் கணக்கில் புதுச்சேரியை வீழ்த்தி தங்கம் வென்றது. அதிலேயே ஆடவா் இருவா் பிரிவில் 23-25, 19-21 என்ற கணக்கில் ஆந்திர பிரதேசத்திடம் வெற்றியை இழந்து வெள்ளி பெற்றது.
இதையடுத்து, வியாழக்கிழமை நிறைவில் பதக்கப் பட்டியலில் தமிழ்நாடு அணி 12 தங்கம், 17 வெள்ளி, 18 வெண்கலம் என 47 பதக்கங்களுடன் 6-ஆவது இடத்தில் நீடிக்கிறது. கா்நாடகம் (56), சா்வீசஸ் (52), மகாராஷ்டிரம் (88) ஆகியவை முறையே முதல் 3 இடங்களில் இருக்கின்றன.