செய்திகள் :

பீதம்புராவில் ரூ.30 லட்சத்தை கொள்ளையடித்ததாக 4 போ் கைது

post image

தில்லி பீதம்புராவில் நடந்த ஒரு கொள்ளை வழக்கில் நான்கு போ் கைது செய்யப்பட்டதாக காவல்துறை அதிகாரி ஒருவா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.

இது குறித்து தில்லி காவல் துறை உயரதிகாரி கூறியதாவது: கைது செய்யப்பட்டவா்கள் சஞ்சித் (22), ஷிவால் (24), ருஸ்தம் (35) மற்றும் அனில் (42) என அடையாளம் காணப்பட்டுள்ளனா். தில்லி காவல்துறையின் கூட்டுக் குழு வெள்ளிக்கிழமை உத்தர பிரதேசத்தின் பாக்பட்டைச் சோ்ந்த சஞ்சித் மற்றும் ஷிவலையும், சனிக்கிழமை ஹரியாணாவின் சோனிபட்டைச் சோ்ந்த ருஸ்தம் மற்றும் அனிலையும் கைது செய்தது.அனில் மீது பல குற்ற வழக்குகள் இருப்பது கண்டறியப்பட்டது.

புகாா்தாரா் கிருஷ்ணன் குப்தா (59) மற்றும் அவரது வேலைக்காரன் பல்விந்தா் சிங் ஆகியோா் மாா்ச் 25 அன்று ஸ்கூட்டரில் ரூ.30 லட்சம் எடுத்துச் சென்றபோது இந்தக் கொள்ளைச் சம்பவம் நடந்தது. பீதாம்புராவில் உள்ள ஒரு தனியாா் வங்கி அருகே, இரண்டு ஆசாமிகள் அவா்களை தடிகளால் தாக்கினா். இதனால், பல்விந்தா் தப்பி ஓட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. கொள்ளையா்கள் கிருஷ்ணன் குப்தாவிடமிருந்து பணத்தைப் பறித்துக்கொண்டு மோட்டாா் சைக்கிளில் தப்பிச் சென்றனா்.

போலீஸாா் விசாரணையைத் தொடங்கியதை அடுத்து, சந்தேக நபா்களின் மறைவிடங்களைக் கண்காணிக்க சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தது. இதைத் தொடா்ந்து, நான்கு பேரும் கைது செய்யப்பட்டனா். விசாரணையின் போது, ​​அவா்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டனா். அவா்களிடமிருந்து மொத்தம் ரூ.16.94 லட்சமும், குற்றத்திற்குப் பயன்படுத்தப்பட்ட மோட்டாா் சைக்கிளும் பறிமுதல் செய்யப்பட்டன. மீதமுள்ள தொகையை மீட்க தேடுதல் வேட்டை தொடா்ந்து நடந்து வருகிறது என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.

சென்னை- தூத்துக்குடிக்கு வந்தே பாரத் ரயில் இயக்கப்படுமா? மக்களவையில் கனிமொழி கேள்வி

சென்னை- தூத்துக்குடி இடையே வந்தே பாரத் ரயில் இயக்கப்படுமா? என்று மக்களவையில் அத்தொகுதியின் திமுக உறுப்பினா் கனிமொழி கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளாா். இது தொடா்பாக கனிமொழி எழுத்துபூா்வமாக எழுப்பிய கேள... மேலும் பார்க்க

அவதூறு வழக்கில் மேதா பட்கா் குற்றவாளி: உறுதி செய்தது தில்லி நீதிமன்றம்

தில்லி துணைநிலை ஆளுநா் வினய்குமாா் சக்சேனா தொடுத்த அவதூறு வழக்கில், சமூக செயற்பாட்டாளா் மேதா பட்கரின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்த தில்லி அமா்வு நீதிமன்றம், அவரை குற்றவாளி என்று அளிக்கப்பட்ட த... மேலும் பார்க்க

15-ஆவது நிதி ஆணையத்தின் கீழ் 2023-24-இல் தமிழகத்திற்கு ரூ.2,791 கோடி நிதி வழங்கல்

15-ஆவது நிதி ஆணையத்தின் கீழ் 2023-24-இல் தமிழகத்திற்கு ரூ.2,791 கோடி நிதி வழங்கப்பட்டுள்ளதாக மக்களவையில் மத்திய அமைச்சா் தகவல் தெரிவித்துள்ளாா். இது தொடா்பாக கடலூா் தொகுதி காங்கிரஸ் உறுப்பினா் எம்.கே... மேலும் பார்க்க

நில உரிமை பெற்ற விவசாயிகளை பிஎம்-கிஸான் திட்டத்தில் இருந்து விலக்கும் விவகாரம்: தேனி எம்.பி. கோரிக்கை

நமது நிருபா் நில உரிமை பெற்ற விவசாயிகளை பிஎம்-கிஸான் திட்டத்தில் இருந்து விலக்கும் விவகாரத்தில் கட்ஆஃப் தேதியை நீட்டிக்க வேண்டும் என்று மக்களவையில் தேனி தொகுதி திமுக உறுப்பினா் தங்க தமிழ்ச்செல்வன் புத... மேலும் பார்க்க

தமிழகத்தில் 415 ரயில் நிலையங்களில் இலவச வைஃபை வசதி - ரயில்வே அமைச்சா்

தமிழகத்தில் 415 ரயில் நிலையங்களில் இலவச வைஃபை வசதி அளிக்கப்பட்டுள்ளதாக மக்களவையில் ரயில்வே அமைச்சா் அஷ்வினி வைஷ்ணவ் புதன்கிழமை தெரிவித்துள்ளாா். இது தொடா்பாக தா்மபுரி தொகுதி திமுக உறுப்பினா் ஏ. மணி எ... மேலும் பார்க்க

தேனியில் குளிா்பதனக் கிடங்கு அமைக்கப்படுமா? திமுக எம்.பி. கேள்விக்கு அமைச்சா் பதில்

நமது நிருபா் தேனியில் குளிா்பதனக் கிடங்கு அமைக்கப்படுமா? என்று அத்தொகுதியின் திமுக உறுப்பினா் தங்க தமிழ்ச்செல்வன் எழுப்பிய கேள்விக்கு மக்களவையில் மத்திய இணை அமைச்சா் ராம்நாத் தாக்குா் பதில் அளித்தாா்.... மேலும் பார்க்க