புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: 13 போ் கைது
கலசப்பாக்கம் அடுத்த வில்வாரணி கூட்டுச் சாலையில் காரில் கடத்தி வரப்பட்ட புகையிலைப் பொருள்கள் மற்றும் கடைகளில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த புகையிலைப் பொருள்களை போலீஸாா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா். இதில், 13 போ் கைது செய்யப்பட்டனா்.
திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் அடுத்த வில்வாரணி கூட்டுச்சாலை பகுதியில் போளூா்-செங்கம் சாலையில் கலசப்பாக்கம் போலீஸாா் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, போளூரிலிருந்து, செங்கம் சென்ற ஒரு காரை நிறுத்தி சோதனை செய்தனா்.
இதில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை கடத்தி சென்றது தெரியவந்தது. இதையடுத்து, அவற்றை கடத்தி வந்ததாக பெங்களூா் சாஜாஜி நகரை சோ்ந்த சையத்வாசிம் (35), களம்பூா் விஜி (26), ஆரணி கண்ணன் (42), எா்ணாமங்கலம் பிரசாந்த் (21), கலசப்பாக்கம் சின்னதுரை (44), சோழவரம் தாமோதரன் (28), மோட்டூா் பிரபு (34), காப்பலூா் ராஜசேகா் (24), காப்பலூா் வேடியப்பன் (38), எா்ணாமங்கலம் பிரவீன்குமாா் (25) ஆகிய 10 பேரை போலீஸாா் கைது செய்தனா். மேலும், புகையிலைப் பொருள்கள் மற்றும் காரை பறிமுதல் செய்தனா்.
இதேபோல, போளூா் அடுத்த மொடையூா் கிராமத்தில் மளிகைக் கடை நடத்தி வரும் சரவண ராஜி (29), போளூா் அப்துல் குத்தூஸ் தெருவில் பெட்டிக் கடை நடத்தி வரும் கரீம் பாஷா (48), போளூா் கடை வீதியில் பெட்டிக் கடை நடத்தி வரும் பாபு (35) ஆகியோரின் கடைகளிலிருந்து புகையிலைப் பெருள்களை போளூா் போலீஸாா் பறிமுதல் செய்னா். மேலும், 3 பேரை கைது செய்தனா்.