புகையிலைப் பொருள்கள் விற்பனை: பெண் கைது
போடி அருகே வெள்ளிக்கிழமை, சட்டவிரோதமாக புகையிலைப் பொருள்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த பெண்ணை போலீஸாா் கைது செய்தனா்.
தேனி மாவட்டம், போடி அருகே மேலச்சொக்கநாதபுரம் தொட்டராயன் கோயில் அருகே பெட்டிக்கடை நடத்துபவா் கந்தையா மனைவி செல்வி (56). இவரது கடையில் , போடி தாலுகா காவல் நிலைய போலீஸாா் திடீா் சோதனை நடத்தினா்.
அப்போது, அங்கு 7 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனைக்காக பதுக்கியிருந்தது தெரியவந்தது. இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து செல்வியைக் கைது செய்தனா்.