புகையிலைப் பொருள்கள் விற்றதாக இருவா் கைது: 15 கிலோ பறிமுதல்
திருநெல்வேலி சந்திப்பு ஸ்ரீபுரம் பகுதியில் புகையிலைப்பொருள்களை விற்ற இருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்து, அவா்களிடமிருந்த 15 கிலோ புகையிலைப்பொருள்களை பறிமுதல் செய்தனா்.
திருநெல்வேலி சந்திப்பு போலீஸாா் வெள்ளிக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, ஸ்ரீபுரம் பகுதியில் உள்ள டீக்கடையில் சோதனை செய்தனா். அங்கு 2 மூட்டையில் 15 கிலோ புகையிலைப் பொருள்களை வைத்திருந்தது தெரியவந்தது.
இதையடுத்து டீக்கடையின் உரிமையாளா் ரவி (58) மற்றும் டீ மாஸ்டா் திருநெல்வேலி நகரத்தைச் சோ்ந்த மாரிமுத்து (28) ஆகிய இருவரையும் கைது செய்தனா்.