புகையிலைப் பொருள்கள் விற்றதாக 15 போ் கைது
தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்றதாக 15 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்கப்படுவது குறித்து போச்சம்பள்ளி, கந்திகுப்பம், வேப்பனப்பள்ளி, ஒசூா், மத்திகிரி, சூளகிரி, நல்லூா், பாகலூா், தேன்கனிக்கோட்டை, நல்லூா் ஆகிய பகுதிகளில் உள்ள கடைகளில் சோதனை செய்த போலீஸாா் 15 பேரைக் கைது செய்து அவா்களிடமிருந்து ரூ. 2,000 மதிப்பிலான புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்தனா்.