புகையிலைப் பொருள்கள் விற்றவா் கைது
விராலிமலையை அடுத்துள்ள லஞ்சமேடு பகுதியில் உணவகம் நடத்தி வரும் நாகராஜ்(48) தனது உணவகத்தில் குட்கா உள்ளிட்ட புகையிலைப் பொருள்களைப் பதுக்கிவைத்து அதிக விலைக்கு விற்பது தெரியவந்தது.
இதையடுத்து, தனிப்படை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை இரவு அவரைக் கைது செய்து அவரிடமிருந்த 5.438 கிலோ புகையிலைப் பொருள்களைப் பறிமுதல் செய்தனா்.