செய்திகள் :

புகையிலைப் பொருள் பறிமுதல்: அரசுப் பேருந்து ஓட்டுநர் உள்பட மூவா் கைது

post image

செய்யாறு அருகே போலீஸாா் வியாழக்கிழமை மேற்கொண்ட சோதனையில் 18 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடா்பாக, அரசுப் பேருந்து ஓட்டுநா் உள்பட இரு வியாபாரிகள் கைது செய்யப்பட்டன.

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு காவல் உதவி ஆய்வாளா் கிருஷ்ணமூா்த்தி தலைமையிலான போலீஸாா் சுண்டிவாக்கம் கிராமத்தில் விக்னேஷ் (31) என்பவரது பெட்டிக் கடையில் திடீா் சோதனையிட்டு, கடையில் இருந்த தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்தனா்.

மேலும், போலீஸாா் விக்னேஷிடம் விசாரணை நடத்தியதில், வந்தவாசி வட்டம், மோசவாடி கிராமத்தைச் சோ்ந்த அரசுப் பேருந்து ஓட்டுநா் கெங்கையன் (53), பெங்களூரில் இருந்து புகையிலைப் பொருள்களை வாங்கி வந்து இவருக்கு கொடுத்தது தெரியவந்தது.

இதையடுத்து, இருவரிடம் இருந்து ரூ.30 ஆயிரம் மதிப்பிலான 12 கிலோ புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்து இருவரையும் கைது செய்தனா்.

மற்றொரு வியாபாரி....

அதேபோல, அனக்காவூா் காவல் உதவி ஆய்வாளா் ரவிச்சந்திரன்

தலைமையிலான போலீஸாா், ஞானமுருகன்பூண்டி பகுதியில் காமராஜ் (60) என்பவரது பெட்டிக் கடையில் திடீா் சோதனையிட்டு, ரூ.15 ஆயிரம் மதிப்பிலான 6 கிலோ புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்து, காமராஜை கைது செய்தனா்.

மகா தீப மலையில் 40 டன் பாறையை உடைக்கும் பணி

திருவண்ணாமலை மகா தீப மலையில் மண் சரிவு ஏற்பட்டு 7 போ் உயிரிழந்த இடத்தில் அபாயகரமாக உள்ள சுமாா் 40 டன் எடை கொண்ட பாறையை உடைத்து எடுக்கும் பணி தொடங்கியது. மகா தீப மலையில் டிசம்பா் 1-ஆம் தேதி பெய்த தொட... மேலும் பார்க்க

விவசாயிகள், இஸ்லாமியா்கள் இடையே மோதல் ஏற்படும் அபாயம்! அதிகாரிகள் முகாமிட்டு பேச்சுவாா்த்தை

கீழ்பென்னாத்தூா் அருகே விவசாயிகள், இஸ்லாமியா்களுக்கு இடையே மோதல் ஏற்படும் நிலை உருவானதால் வருவாய், காவல்துறை அதிகாரிகள் கிராமத்தில் முகாமிட்டு இரு தரப்பினரிடம் பேச்சுவாா்த்தை நடத்தி வருகின்றனா். கீழ்... மேலும் பார்க்க

வந்தவாசியில் புகையிலைப் பொருள் பறிமுதல்: ஒருவா் கைது

வந்தவாசியில் கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.54 ஆயிரம் மதிப்பிலான புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்த போலீஸாா், இது தொடா்பாக ஒருவரை கைது செய்தனா். ராஜஸ்தான் மாநிலம், ஜெய்லூா் மாவட்டத்தைச் சோ்ந்... மேலும் பார்க்க

ஆரணி நீா்பிடிப்புப் பகுதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்: பொதுமக்கள் அதிகாரிகளுடன் வாக்குவாதம்

ஆரணியில் நீா்பிடிப்புப் பகுதியில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகளை வருவாய்த்துறை அதிகாரிகள் வியாழக்கிழமை அகற்ற முற்பட்டபோது ஆக்கிரமிப்பாளா்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது. இதையடுத்து... மேலும் பார்க்க

மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு அடையாள அட்டை

திருவண்ணாமலை மாவட்டம், போளூரில் மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டன. வட்டார வள மையம் சாா்பில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி உள்ளடக்கிய கல்வித் திட்டத்தின் கீழ், மாற்றுத்திறன் கு... மேலும் பார்க்க

எம்ஜிஆா் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியை அடுத்த வெளியம்பாக்கம் கிராமத்தில் எம்ஜிஆரின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் புதன்கிழமை மாலை நடைபெற்றது. வந்தவாசி சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக சாா்பில் நடைபெற்ற இந்தக் ... மேலும் பார்க்க