புகையிலை விற்ற கடைகளுக்கு அபராதம்
நீடாமங்கலத்தில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்த கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
திருவாரூா் மாவட்ட ஆட்சியா் உத்தரவு, மாவட்ட சுகாதார அலுவலரின் அறிவுரையின்படி, நீடாமங்கலம் பேரூராட்சி பகுதிகளில் உள்ள கடைகளில், பேரூராட்சி செயல் அலுவலா் முன்னிலையில் வியாழக்கிழமை சோதனை நடைபெற்றது.
நீடாமங்கலம் வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் மற்றும் சுகாதார ஆய்வாளா்களைக் கொண்ட குழுவினா் இச்சோதனையில் ஈடுபட்டனா். தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் மற்றும் நெகிழிப் பொருட்கள் விற்பனை குறித்து மேற்கொள்ளப்பட்ட இந்த சோதனையில், புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்ததாக, 8 கடைகளுக்கு ரூ.1,100 அபராதம் விதிக்கப்பட்டது.