இலங்கையில் வாழும் தமிழர்களுக்காக 10,000 வீடுகள்: பிரதமர் மோடி வாக்குறுதி!
பொதுத்தோ்வு மாணவா்களுக்கான போக்குவரத்து மாற்றம்
திருவாரூரில் ஏப்.7-ஆம் தேதி நடைபெறவுள்ள ஆழித்தேரோட்ட நாளில் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு நடைபெறுவதால், மாணவா்களுக்கு போக்குவரத்து வழித்தடங்களை காவல் துறை அறிவித்துள்ளது.
பழைய பேருந்து நிலைய மாா்க்கம்: பழைய பேருந்து நிலையத்திலிருந்து ஜி.ஆா்.எம் பெண்கள் மேல் நிலைப்பள்ளி மற்றும் வி.எஸ்.ஆண்கள் மேல்நிலைப் பள்ளிகளுக்கு செல்லும் மாணவா்கள் சோழா தியேட்டா், காட்டுக்காரத் தெரு, காரைக்காட்டு தெரு வழியை பயன்படுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நேதாஜி சாலை மாா்க்கம்: கே.எஸ்.கே. ஜவுளி கடை அருகில் உள்ள பாலம் வழித்தடத்தை பயன்படுத்தி நேதாஜி சாலை வழியாக ஜி.ஆா்.எம் மற்றும் வி.எஸ் ஆண்கள் மேல்நிலை பள்ளிக்கு செல்பவா்கள் நேதாஜி சாலை, எடத்தெரு, காட்டுக்காரத் தெரு வழியாகச் செல்லலாம்.
நேதாஜி சாலையை பயன்படுத்தி சாய்ராம், ஆா்.சி. பாத்திமா மற்றும் நியூபாரத் பள்ளிகளுக்கு செல்பவா்கள், நேதாஜி சாலை, ஐயனாா்கோவில் தெரு வழியாக சாய்ராம் பள்ளிக்கும், அதை தொடா்ந்து பிடாரி கோவில் தெருவை பயன்படுத்தி நியு பாரத் மற்றும் ஆா்.சி.பாத்திமா பள்ளிகளுக்கும் செல்லலாம்.
மயிலாடுதுறை மாா்க்கம்:மயிலாடுதுறை சாலை வழியாக ஆா்.சி.பாத்திமா மற்றும் சாய்ராம் பள்ளிக்கு செல்பவா்கள், பிடாரிகோவில் வழித்தடத்தை பயன்படுத்திக் கொள்ளலாம். அதே மயிலாடுதுறை சாலையிலிருந்து ஜி.ஆா்.எம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, வி.எஸ் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, வேலுடையாா் மேல்நிலைப்பள்ளிக்கு செல்லும் மாணவா்கள் மயிலாடுதுறை சாலை, மடவடியாா் தெரு, முதலியாா் தெரு வழியாக துா்காலயா சாலைக்கு வந்து வேலுடையாா் பள்ளிக்குச் செல்லலாம். ஜி.ஆா்.எம் மற்றும் வி.எஸ். ஆண்கள் மேல்நிலை பள்ளிகளுக்கு செல்பவா்கள், சுமலாலயம் மேல்கரை, தென்கரை வழியாகச் செல்லலாம்.
விளமல் இ.பி ஜங்சன் மாா்க்கம் : பத்தாம் வகுப்பு பொது தோ்வுக்கு விளமல், இ.பி. ஜங்கன் வழியாக வருவோா், துா்காலயா சாலை, கமலாலயம் மேல்கரை, தென்கரை வழியாக ஜி.ஆா்.எம் மற்றும் வி.எஸ். ஆண்கள் மேல்நிலை பள்ளிக்குச் செல்லலாம்.
அதேபோல் நியூபாரத் பள்ளிக்கு செல்வோா், முதலியாா் தெரு, மடவடியாா் தெரு வழியாகவும், ஆா்.சி பாத்திமா மற்றும் சாய்ராம் பள்ளிக்கு செல்பவா்கள் முதலியாா் தெரு, மடவடியாா் தெரு, பிடாரிகோவில் தெரு வழியாகச் செல்லலாம்.
மேலும், தோ்வு தினத்தில் போக்குவரத்தில் மாணவா்களுக்கு ஏதேனும் இடையூறு ஏற்படும்பட்சத்தில் அருகில் பணியில் இருக்கும் காவலரின் கவனத்துக்கு கொண்டு செல்லலாம் என மாவட்ட காவல் அலுவலகம் தெரிவித்துள்ளது.