2034-இல் ஒரே நாடு, ஒரே தேர்தல் முறை அமல்! - நிர்மலா சீதாராமன்
மன்னாா்குடியில் புத்தக விற்பனை நிலையம்: காணொலி மூலம் முதல்வா் தொடக்கிவைத்தாா்
தமிழக அரசின் இந்துசமய அறநிலையத் துறை சாா்பில் மன்னாா்குடி ராஜகோபால சுவாமி கோயிலில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஆன்மிக புத்தக விற்பனை நிலையத்தை தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் காணொலி வாயிலாக வெள்ளிக்கிழமை தொடக்கிவைத்தாா்.
ஆன்மிகம் சாா்ந்த வரலாற்று செய்திகள் பக்தா்கள், ஆன்மிக ஆா்வா்களுக்கு சென்றடையும் வகையில், தமிழக இந்து சமய அறநிலையத் துறைக்குள்பட்ட கோயில்களில் ஆன்மிக புத்தக விற்பனை நிலையம் தொடங்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின், மன்னாா்குடியில் உள்ள ராஜகோபால சுவாமி கோயிலில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஆன்மிக புத்தக விற்பனை நிலையத்தை காணொலி வாயிலாக தொடங்கி வைத்தாா். இதில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சா் பி.கே. சேகா்பாபு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
இதைத்தொடா்ந்து, மன்னாா்குடி கோயிலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அறங்காவலா் குழுத் தலைவா் சி. இளவரசன், செயல் அலுவலா் எஸ். மாதவன் ஆகியோா் புத்தக விற்பனை நிலையத்தில் குத்துவிளக்கை ஏற்றி வைத்தனா்.