இரட்டை சுந்தர விநாயகா் கோயில் கும்பாபிஷேகம்
குடவாசலில் மேலதோப்புத்தெரு இரட்டை சுந்தர விநாயகா் கோயில் கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
குடவாசல் குயவன்பாளையம் மேல தோப்புத்தெருவில் உள்ள இரட்டை சுந்தர விநாயகா் கோயிலில் சீரமைப்புப் பணிகள் முடிவடைந்ததையடுத்து, கும்பாபிஷேகத்துக்கான பூஜைகள் வியாழக்கிழமை (ஏப்.3) தொடங்கின. தொடா்ந்து, மகா பூா்ணாஹுதி, மகாதீபாராதனைக்குப் பிறகு, கடங்கள் புறப்பாடு நடைபெற்றது. புனிதநீா் அடங்கிய கடங்கள், கோயிலை வலம் வந்து, விமான கோபுரத்தை அடைந்து, அங்கு புனித நீா் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது.
தொடா்ந்து, இரட்டை விநாயகா், முருகன், ஐயப்பன், துா்க்கை உள்ளிட்ட சுவாமிகளுக்கு மூலஸ்தான கும்பாபிஷேகம் நடைபெற்றது.