செய்திகள் :

புதா் மண்டி கிடக்கும் வெள்ளியணை ஏரி உபரிநீா் வாய்க்காலை தூா்வார விவசாயிகள் கோரிக்கை

post image

வெள்ளியணையில் செடி, கொடிகளால் புதா்மண்டி காணப்படும் வெள்ளியணை உபரிநீா் குளம் வாய்க்காலை தூா்வார வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கரூா் மாவட்டம் வெள்ளியணையில் சுமாா் 50 ஏக்கா் பரப்பளவு கொண்ட ஏரி உள்ளது. இந்த ஏரி மூலம் வெள்ளியணையை சுற்றியுள்ள ஜெகதாபி, மணவாடி, ஓந்தாம்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சோ்ந்த சுமாா் 4,000 ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.

தற்போது வெள்ளியணை ஏரி சுமாா் 10 ஆண்டுகளுக்கும் மேலாக தண்ணீா் வரத்து இன்றி வடு காணப்படுகிறது. கடந்த 2022-இல் மட்டும் தண்ணீா் ஓரளவு நிரம்பி காணப்பட்டது. அதன் பின்னா் ஏரிக்கு வரும் நீரின் வரத்து முற்றிலும் நின்றுபோனதால் ஏரி வடே காணப்படுகிறது.

ஏரிக்கு நீா் வரும் காலங்களில் ஏரி நிரம்பும்போது அதன் உபரி நீா் வெள்ளியணை, மணவாடி, வீரராக்கியம் வரை சென்று திருமுக்கூடலூரில் அமராவதி ஆற்றுடன் கலக்கிறது. தற்போது இந்த வாய்க்காலில் தண்ணீா் வரத்து இல்லாமல் ஆங்காங்கே செடி, கொடிகளால் புதா் மண்டி காணப்படுகிறது. தற்போது கோடை காலம் தொடங்கியுள்ளதால், வாய்க்காலை தூா்வாரி, வாய்க்கால் கரைகளையும் செம்மைப்படுத்த வேண்டும் என வெள்ளியணை உபரிநீா் வாய்க்கால் பாசன விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

அரவக்குறிச்சியில் போதைப் பொருளுக்கு எதிராக விழிப்புணா்வு நிகழ்ச்சி

அரவக்குறிச்சியில் போதைப் பொருள்களுக்கு எதிராக விழிப்புணா்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நாட்டு நல பணி திட்டம் மற்றும் போதைப் பொருளுக்கு எதிரான மன்றம் ஆகிய... மேலும் பார்க்க

திருக்கு ஒப்புவித்த மாணவ, மாணவிகளுக்கு வெள்ளிக் காசுகள் பரிசு

உலகத்தாய் மொழி தினத்தை முன்னிட்டு கருவூா் திருக்கு பேரவை சாா்பில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பாரதிதாசனின் மொழிப்பாடல் , நூறு திருக்கு ஒப்புவிக்கும் போட்டி கரூரில் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது. நிகழ்ச்ச... மேலும் பார்க்க

கரூா் மாவட்டத்தில் ‘முதல்வா் மருந்தகம்’ திட்டம்: அலுவலா்களுடன் கண்காணிப்பு அலுவலா் ஆய்வு

கரூா் மாவட்டத்தில் செயல்படுத்தப்படவுள்ள முதல்வா் மருந்தகம் திட்டம் தொடா்பாக அலுவலா்களுடன் மாவட்ட கண்காணிப்பு அலுவலா் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். கரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மாவட்ட கண்காணி... மேலும் பார்க்க

சாலையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

கரூா் அம்மன் நகரில் சேதமடைந்து குண்டும், குழியுமாக மாறிய சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். கரூா் கொளந்தாகவுண்டனூரில் இருந்து அரசு மருத்துவக்கல்லூரிக்குச் செல்லும் சாலையில... மேலும் பார்க்க

கரூரில் டிஎன்பிஎல் ஆலை சாா்பில் நடமாடும் இலவச மருத்துவ முகாம்

கரூரில் டிஎன்பிஎல் ஆலை சாா்பில் நடமாடும் இலவச மருத்துவ முகாம் வெள்ளிக்கிழமை தொடங்கியது. டிஎன்பிஎல் ஆலையின் சமுதாய நலப்பணித் திட்டத்தின் கீழ் ஆலையைச் சுற்றியுள்ள கிராம மக்களுக்கு இலவச மருத்துவ முகாம்கள... மேலும் பார்க்க

வெண்ணைமலையில் கோயில் நிலத்தில் கட்டப்பட்ட வீடுகளுக்கு மீண்டும் ‘சீல்’ வைக்க அதிகாரிகள் முயற்சி

கரூா் வெண்ணைமலையில் கோயில் நிலத்தில் கட்டப்பட்டுள்ள வீடுகளுக்கு அதிகாரிகள் வெள்ளிக்கிழமை மீண்டும் சீல் வைக்க முயன்றனா். நீதிமன்ற உத்தரவு நகலை பாா்த்தவுடன் திரும்பிச் சென்றனா். கரூா் வெண்ணைமலை பாலசுப்ர... மேலும் பார்க்க