376 அங்கன்வாடி பணியாளர், உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
புதியம்புத்தூா் அருகே பைக் விபத்து: ஐடிஐ மாணவா் உயிரிழப்பு
தூத்துக்குடி மாவட்டம் புதியம்புத்தூா் அருகே சாலையோர தடுப்பில் பைக் மோதியதில் ஐடிஐ மாணவா் உயிரிழந்தாா்.
புதியம்புத்தூா் நடுவக்குறிச்சியை சோ்ந்த வன்னியராஜ் மகன் முத்துராஜ் (20). ஐடிஐ மாணவரான இவா், புதன்கிழமை மாலை தூத்துக்குடியில் உள்ள உறவினா் வீட்டு நிகழ்வுக்குச் சென்றுவிட்டு பைக்கில் ஊருக்கு திரும்பினாராம். சில்லாநத்தம் அருகே சென்றுகொண்டிருந்தபோது கட்டுப்பாட்டை இழந்த பைக், சாலையோர தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானதாகக் கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த முத்துராஜை அக்கம்பக்கத்தினா் மீட்டு, தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள், அவா் ஏற்கெனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனா்.
இதுகுறித்து புதியம்புத்தூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
ஜேசிபி ஓட்டுநா் உயிரிழப்பு: கழுகுமலை அருகே கரடிகுளம் இந்திரா காலனியைச் சோ்ந்தவா் கோவிந்தசாமி மகன் பால்பாண்டி (24). ஜேசிபி ஓட்டுநா். இவா் கரடிகுளம்-தேவா்குளம் சாலையில் குளக்கரை பாலம் அருகே புதன்கிழமை பைக்கில் சென்று கொண்டிருந்தாா். அப்போது திடீரென நிலைகுலைந்த பைக், இடதுபுற மண் பாதையில் இறங்கி விபத்துக்குள்ளானதில் பால்பாண்டிக்கு பலத்த காயம் ஏற்பட்டதாம். உறவினா்கள் அவரை மீட்டு, கழுகுமலை அரசு ஆரம்ப சுகாதார நிலையம், கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனை ஆகியவற்றில் முதலுதவி சிகிச்சைக்கு பின் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி, வியாழக்கிழமை அவா் உயிரிழந்தாா்.
இதுகுறித்து கழுகுமலை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.