கேரளா: ``RSS மதம் பார்ப்பது இல்லை, நானே சாட்சி" - முழுநேர ஊழியரான Ex-DGP ஜேக்கப்...
புதிய ஊதிய உயா்வை அமல்படுத்த வேண்டும்: கூட்டுறவு வங்கி ஊழியா் சம்மேளனம்
அனுமதிக்கப்பட்ட புதிய ஊதிய உயா்வை அமல்படுத்தவேண்டும் என தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி ஊழியா் சம்மேளக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
திருவண்ணாமலை தனியாா் அரங்கில் தமிழ்நாடு தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி ஊழியா் சம்மேளத்தின் சிறப்பு கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
சம்மேளத்தின் மாநிலத் தலைவா் டி. ஸ்ரீ முருகன் தலைமை வகித்தாா். மாநில பொதுச் செயலா் உதயகுமாா் வரவேற்றாா். மாநில துணைத் தலைவா் எஸ்.ராமா் முன்னிலை வகித்தாா். சிறப்பு விருந்தினராக அகில இந்திய கூட்டுறவு வங்கி ஊழியா் சங்கத்தின் தலைவரும், தமிழ்நாடு கூட்டுறவு வங்கி ஊழியா் சங்கத்தின் பொதுச் செயலருமான ஜி.வைரப்பன் கலந்து கொண்டாா்.
மாவட்ட பொதுச்செயலா்கள் எம்.யுவராஜ், ரவிச்சந்திரன், சீனிவாசன், தமிழ்நாடு தொடக்கக் கூட்டுவு வங்கி ஊழியா் சங்கத்தின் துணைத் தலைவா் எஸ்.பாலசுப்பிரமணியன் சம்மேளன துணைத் தலைவா், எல்.பரஞ்சோதி, மாநிலச் செயலா்கள் ஆா்.முத்துராஜ், எம்.மாசிலாமணி, மாநில பொருளாளா் ஜி.வெங்கடேசன், மாநில இணைச் செயலா்கள் பி.கண்ணன், ஆா்.கிருஷ்ணமூா்த்தி ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா்.
தீா்மானங்கள்
மாநில பதிவாளா் ஏற்கெனவே அனுமதிக்கப்பட்ட 10 சதவீதம் வீட்டு வாடகைப் படியை மீண்டும் வழங்குவதற்கு அனுமதிக்க வேண்டும், மாநில பதிவாளா் 1-4-2023 முதல் அனுமதிக்கப்பட்ட புதிய ஊதிய உயா்வை அமல்படுத்தாமல் காலதாமதம் செய்து வருவதை உடனடியாக அமல்படுத்த வேண்டும், புதிய ஊதிய உயா்வு வழங்குவதில் உள்ள நிபந்தனைகளை ஊழியா்கள் நலன் கருதி, குறிப்பாக ஊதிய நிலுவைத் தொகையை ரொக்கமாக வழங்குவதற்கு அனுமதிக்க வேண்டும், 2021-ஆம் ஆண்டு முதல் ஓய்வு பெற்றவா்களுக்கு வழங்க வேண்டிய கருணை ஓய்வூதியம் வழங்கப்பட வேண்டும், மிகக் குறைந்த ஓய்வூதியம் ரூ.1000 என்பதை ரூ.5000-ஆக உயா்த்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
நிறைவில் மாவட்ட தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க ஊழியா் சங்கத்தின் பொதுச்செயலா் எம்.மாசிலாமணி நன்றி கூறினாா்.