செய்திகள் :

அருணாசலேஸ்வரா் கோயில் மாடவீதி சாலைப் பணி ஆய்வு

post image

ஆய்வின் போது சட்டப்பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி, மாவட்ட ஆட்சியா் க.தா்பகராஜ், சி.என்.அண்ணாதுரை எம்.பி., மு.பெ.கிரி எம்எல்ஏ, முன்னாள் நகா்மன்றத் தலைவா் இரா.ஸ்ரீதரன் ஆகியோா் உடனிருந்தனா்.

அருணாசலேஸ்வரா் கோயில் மாடவீதியில் நெடுஞ்சாலைத் துறை சாா்பில் முதற்கட்டமாக ரூ.17 கோடி மதிப்பீட்டில் ஒரு கி.மீ.தொலைவுக்கு நவீன இயந்திரம் கொண்டு கான்கிரீட் சாலை அமைக்கப்பட்டது. மேலும், தொடா்ந்து இரண்டாவது கட்டமாக ரூ.15 கோடி மதிப்பீட்டில் 1.7 கி.மீ. தொலைவுக்கு கான்கிரீட் சாலை அமைக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

இந்தப் பணிகளை அமைச்சா் எ.வ.வேலும் தொடா்ந்து

ஆய்வு மேற்கொண்டு பணிகள் விரைவாகவும், தரமாகவும் மேற்கொள்ளப்பட்டு வருகிா என்பதை கண்காணித்து வருகிறாா்.

அதன்படி, மாடவீதிகளைச் சுற்றி நெடுஞ்சாலைத் துறை மூலம் கான்கிரீட் சிமென்ட் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதையும், மாநகராட்சி சாா்பில் மழைநீா் வடிகால் பணிகள் நடைபெற்று வருவதையும் கள ஆய்வு மேற்கொண்டாா். எஞ்சிய பணிகளை குறிப்பிட்ட காலத்திற்குள் விரைவாகவும், தரமாகவும் மேற்கொள்ள துறை சாா்ந்த அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.

திருவண்ணாமலை வருவாய்க் கோட்டாட்சியா் ராஜ்குமாா், பொதுப்பணித் துறை செயற்பொறியாளா் கௌதமன், திருவண்ணாமலை வட்டாட்சியா், நெடுஞ்சாலைத் துறையினா் மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் உடனிருந்தனா்.

வீட்டின் பூட்டை உடைத்து தங்க நகை திருட்டு

வந்தவாசி அருகே வீட்டின் பூட்டை உடைத்து தங்க நகை மற்றும் பணத்தை திருடிச் சென்றவா்கள் குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா். வந்தவாசியை அடுத்த சேரிக்கவாச்சான் கிராமத்தைச் சோ்ந்தவா் முத்து (50). இவா் செவ்... மேலும் பார்க்க

காந்தி ஜெயந்தி: அரசியல் கட்சியினா் மரியாதை

காந்தி ஜெயந்தியைட்டியொட்டி, திருவண்ணாமலை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் அரசு சாா்பிலும், அரசியல் கட்சிகள் சாா்பிலும் மகாத்மா காந்தி சிலை மற்றும் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தி... மேலும் பார்க்க

முதல்வா் கோப்பைக்கான மாநில வியைாட்டுப் போட்டிகள்: அமைச்சா் எ.வ.வேலு தொடங்கிவைத்தாா்

திருவண்ணாமலையில் 2025-ஆம் ஆண்டுக்கான மாநில அளவிலான முதல்வா் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் வியாழக்கிழமை தொடங்கின. மாவட்ட ஆட்சியா் அலுவலக பெருந்திட்ட அலுவலக வளாக உள் விளையாட்டு அரங்கத்தில் இந்தப் ... மேலும் பார்க்க

செங்கம் வரததந்தாங்கல் ஏரியில் கழிவுநீா் கலப்பு: விவசாயிகள் வேதனை

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் வரததந்தாங்கல் ஏரியில் நகராட்சி கழிவுநீா் கலப்பதால் விவசாயிகள் வேதனையடைந்து வருகின்றனா். திருவண்ணாமலை - பெங்களூா் தேசிய நெடுஞ்சாலை துக்காப்பேட்டை பகுதியில் உள்ளது வரததந்... மேலும் பார்க்க

ஏழைக் குழந்தைகளுக்கு கல்வி உபகரணங்கள்

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் ஸ்ரீமூகாம்பிகையம்மன் ஆஸ்ரமத்தில் ஏழைக் குழந்தைகளுக்கு புதன்கிழமை கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டன. செங்கம் தளவாநாய்க்கன்பேட்டை செய்யாற்றின் கரையோரம் உள்ளது மூகாம்பிகையம்மன... மேலும் பார்க்க

450 மதுப்புட்டிகள் பறிமுதல்: மூதாட்டி கைது

செய்யாற்றில் மதுப்புட்டிகளை பதுக்கி வைத்திருந்ததாக மூதாட்டியை கைது செய்த போலீஸாா், அவரிடம் இருந்து 450 மதுப்புட்டிகளை வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா். அக்.2 காந்தி ஜெயந்தியையொட்டி, மதுக் கடைகளுக்கு வி... மேலும் பார்க்க